இந்த வாட்ச்சில் 1.4 இன்ச் எல்சிடி தொடுதிரை உள்ளது. இதன் பிக்சல் 320x320 ஆகும்.
 
                நாய்ஸ் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச்சில் பத்து விதமான ஸ்போர்ட் மோட்ஸ் உள்ளன
ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நாய்ஸ் கலர்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் வரும் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் பிற சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
நாய்ஸ் கலர்ஃபிட் நிறுவனம் முதன்முதலாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வாட்ச் பல மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது.
இதில் ஹை ரெசொல்யூசன் டிஸ்பிளே, கஸ்டம் வாட்ச் ஃபேஸ், 10 ஸ்போர்ட்ஸ் மோட்ஸ், இதயத்துடிப்பு கணிப்பு, உறக்க நிலை கணிப்பு, சமூக வலைதளங்களின் நோட்டிபிகேஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. மேலும், மியூசிக் கன்ட்ரோல் வசதியும் உள்ளது.
கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் தண்ணீரில் இருந்து பாதுகாப்பு, தூசுக்களில் இருந்து பாதுகாப்பு போன்றவற்றில் நல்ல மதிப்பு பெற்றுள்ளது. குறிப்பாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இந்த வாட்சைப் பயன்படுத்தலாம்.
இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அமேசான் இணையதளத்திலும், gonoise.com என்ற கம்பெனியின் இணையதளத்திலும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை 3,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் ஏற்கனவே தனது இணையதளத்தில் கலர்ஃபிட் நேவ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்காக பிரத்யேக பக்கத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி, இந்த வாட்ச்சில் 1.4 இன்ச் எல்சிடி தொடுதிரை உள்ளது. இதன் பிக்சல் 320x320 ஆகும். இதில் இன்பில்டு ஜிபிஎஸ் இருப்பதால், நடைபயற்சி செய்யும் போது எவ்வளவு தூரம் சென்றுள்ளோம் என்பதும் தெரியும். நமது உடலின் கலோரி இருப்புநிலையையும் அறிந்து கொள்ள முடியும்.
ஏற்கனவே கூறியபடி இதில் 10 விதமான ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளன. அதாவது வாக்கிங், சைக்ளிங், டான்சிங், பேட்மிண்டன், யோகா, ரன்னிங், ஸ்ட்ரென்த் டிரெயினங் உள்ளிட்ட மோட்கள் உள்ளன. இது அந்தந்த மோட்டுக்கு ஏற்றவாறு தகவல்களை வழங்கும்.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                            
                                iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                        
                     Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                            
                                Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                        
                     OpenAI Introduces Aardvark, an Agentic Security Researcher That Can Find and Fix Vulnerabilities
                            
                            
                                OpenAI Introduces Aardvark, an Agentic Security Researcher That Can Find and Fix Vulnerabilities
                            
                        
                     Xiaomi 17, Poco F8 Series and Redmi Note 15 Listed on IMDA Certification Website Hinting at Imminent Global Launch
                            
                            
                                Xiaomi 17, Poco F8 Series and Redmi Note 15 Listed on IMDA Certification Website Hinting at Imminent Global Launch