இன்று சீனாவில் நடக்கவுள்ள இந்த நிகழ்வு அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது.
Photo Credit: Weibo/ Lei Jun
6 வண்ணங்களில் வெளியாகவுள்ள 'Mi Band 4'
சியோமியின் ஸ்மார்ட்வாட்ச்களில் புதிய அறிமுகமான "Mi Band 4" இன்று சீனாவில் அறிமுகமாகிறது. சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது வரை வெளியிட்ட தகவல்களின்படி, புதிய ஸ்மார்ட்வாட்ச் இதன் முந்தைய ஸ்மார்ட்வாட்சான "Mi Band 3"-யை விட பெரிய வண்ணத்திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 6 வண்ணங்களில் வெளியாகவுள்ளது போன்ற தகவல்களை சியோமி நிறுவனம் சில டீசர்களின் வாயிலாக வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் எப்போது வெளியாகிறது, விலை என்னவாக இருக்கும், என்னென்ன சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் - முழு தலவல்கள் உள்ளே!
சியோமியின் புதிய ஸ்மார்ட்வாட்சான "Mi Band 4" முதன்முதலில் சீனாவில் தான் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு ஜூன் 11 தேதியான இன்று நடைபெரும் என முன்னதாகவே சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சீனாவில் நடக்கவுள்ள இந்த நிகழ்வு அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 11:30 மணியாகும். இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை, சியோமி நிறுவனத்தின் தளத்தில் காணலாம்.
இன்னும், அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாத நிலையில், சீனாவில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 199 சீன யுவான்களாக (1,994 ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவில் வெளியான "Mi Band 3", 1,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.
முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றி சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த "Mi Band 4" ஸ்மார்ட்வாட்ச் கலர் OLED திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் "Mi Band 3"-யின் திரையை விட பெரிய திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் வெளியிட்டிருந்த மற்றொரு டீசரின்படி, இந்த ஸ்மார்ட்வாட்ச் 6 வண்ணங்களில் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சின் முந்தைய வெர்ஷனான "Mi Band 3" மூன்று வண்ணங்களுடனே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்வாட்சில் மோபைல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் எனவும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்சில் ஸ்மார்ட்போன்களுக்கு அருகாமையில் கொண்டு சென்றால், அவற்றுடன் தானாகவே இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் NFC தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச் இதன் முந்தைய ஸ்மார்ட்வாட்சை விட அதிகரித்த பேட்டரி அளவை கொண்டு வெளியாகலாம். இந்த "Mi Band 4" ஸ்மார்ட்வாட்சில் ஹார்ட் ரேட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70, V70 Elite Confirmed to Launch in India With Snapdragon Chipsets
Xiaomi 17 Listing Hints at Price in Europe, Presence of Smaller Battery
Nintendo Will Reportedly Host a Nintendo Direct: Partner Showcase Next Week