இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ள லெனோவா
லெனோவா நிறுவனம இந்தியாவில் தனது 'ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2' ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், இதயத்துடிப்பை அளவிடும் சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 100mAh பேட்டரி, 5ATM வட்டர்ப்ரூப் அளவு பொன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த 'லெனோவா ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2' ஸ்மார்ட்வாட்ச் ஏற்கனவே விற்பனைக்கு வந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும்.
இந்தியாவில் இந்த 'லெனோவா ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2' ஸ்மார்ட்வாட்ச் 1,499 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் தளத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கருப்பு நிறம் என்ற ஒரே வண்ணத்தில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 0.87-இன்ச் அளவிலாஅ OLED திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் வால்கிங், ரன்னிங் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சி நடவடிக்கைகளை கண்கானித்துக்கொள்ளலாம். உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றை திரையிடும் இந்த ஸ்மார்ட்வாட்ச், உங்கள் தூக்கத்தை கூட மேற்பார்வையிடும். 'ரிமைன்ட் மோட்' கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச், உங்கள் தூக்கம், நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டிய நேரம், எவ்வளவு அடிகள் நீங்கள் நடக்கிறீர்கள் என அனைத்தையும் அளவிட்டு கூறும்.
முன்பு கூறியதுபோல இந்த 'லெனோவா ஸ்மார்ட் பேண்ட் கார்டியோ 2' ஸ்மார்ட்வாட்ச் 24 மணி நேரமும் உங்கள் இதயத்துடிப்பை அளவிடும் சென்சார் பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது. 100mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச், 20 நாட்கள் நீடிக்கும் பேட்டரி திறனை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 5ATM வட்டர்ப்ரூப் அளவை கொண்டுள்ளது. இதன் மூலம் 50மீ ஆழம் வரை தண்ணீருக்குள் செல்லலாம், நீச்சலடிக்கும்போது கூட இந்த வாட்சை அணிந்துகொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z TriFold Pricing Revealed; Here's How Much It Might Cost in India and Other Markets