இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால், இரண்டு வாரங்கள் நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது.
Photo Credit: Huawei
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆரஞ்சு மற்றும் பச்சை என இரு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது
கடந்த திங்கட்கிழமை ஹவாய் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம், ஹவாய் P30 தொடர் ஸ்மார்ட்போன்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் என இரண்டு அமைப்புகளுடனும் இணைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் 15,990 ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாக ஹவாய் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 454x454 பிக்சல்களுடன் 1.39-இன்ச் AMOLED HD திரையை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் குறைந்த எடை, நீண்ட நேரத்திற்கு இந்த ஸ்மார்ட்போனை கட்டிக்கொள்ள வசதியாக இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்சின் கவணிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான தகவல் என்னவென்றால், ஒருமுறை சார்ஜ் செய்தால், இரண்டு வாரங்கள் நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் ஸ்மார்ட்வாட்ச் சார்ஜ் செய்யும் துயரை குறைக்கவே இந்த வசதி.
உங்கள் இதயத்துடிப்பு, நீங்கள் தூங்கும் நேரம் என அனைத்தையும் கண்கானிக்கும் வகையிலேயே இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் வடிவமைப்பு அமைந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் 1 வருட வாரன்டியுடன் ஃப்ளிப்கார்ட்டில் 15,990 ரூபாய் என்ற விலைக்கு விற்பனைக்கு விற்பனையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆரஞ்சு மற்றும் பச்சை என இரு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut