ஸ்டீரியோ வசதியுடன் வெளியான போட் நிறுவனத்தின் பட்ஜட் தயாரிப்பு!
இந்தியாவில் பட்ஜெட் ஸ்பீக்கர்களின் பட்டியலில் முதன்மையாக திகழும் போட் நிறுவனம், தனது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. போட் நிறுவனம் சார்பாக ஸ்டோன் 600 ஸ்பீக்கர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது போட் ஸ்டோன் 650 விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
அமேசானில் வெளியாகியுள்ள இந்தத் தயாரிப்பு ரூ.1,899-க்கு விற்பனை செய்யப்படுகிறது. IPX5 தண்ணீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்பு சான்றிதழை இந்த ஸ்பீக்கர்கள் பெற்றுள்ள நிலையில் சார்கோல் பிளாக், நேவி ப்ளூ மற்றும் ரேஜிங் ரெட் ஆகிய நிறங்களில் அமேசானில் தற்போது விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
'டைமண்ட் ஸ்ட்டட் மெஷ்' என அழைக்கப்படும் டிசைனை கொண்டுள்ள இந்த ஸ்பீக்கர்கள், 5W ஸ்பீக்கர் ஸ்டீரியோ மற்றும் 7 மணி நேரம் வரை தாங்கும் பேட்டரி வசதி போன்ற பல முக்கிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1,800mAh பேட்டரி பவர் கொண்ட இந்த ஸ்பீக்கர், வையர்லெஸ் முறையில் இயங்கும். ப்ளூ-டூத் 4.2 உதவியால் இயங்கும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர், பட்டன் கன்ட்ரோலை கொண்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து மிகவும் தீவரமாக தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வரும் போட் நிறுவனம், தனது அடுத்த அறிமுகமாக போட் ஸ்டோன் 700A, அலெக்சா உதவியுடன் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Instagram Announces a Five-Hashtag Limit for Reels and Posts to Improve Content Discovery