boAt நிறுவனம் தனது புதிய boAt Smart Ring Active மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Photo Credit: Gadgets 360
boAt நிறுவனம் தனது புதிய boAt Smart Ring Active மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் Health Monitors கொடுக்கப்பட்டுள்ளன. Heart Rate Monitor, Sleep Monitor, Body Temperature Monitor, Blood Oxygen Levels Monitor போன்றவை இடம்பெற்றுள்ளது. துருப்பிடிக்காத எஃகு பாடியை கொண்டுள்ளது. போட் ஸ்மார்ட் ரிங் ஆக்டிவ் மூன்று வண்ண விருப்பங்கள் மற்றும் ஐந்து அளவுகளில் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஒரு போர்ட்டபிள் காந்த சார்ஜிங் கேஸுடன் இருக்கும்.
5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்குடன் வருகிறது. தண்ணீரில் மூழ்கினாலும் பாதிப்படையாது. ஆபத்து காலங்களில் SOS அழைப்புகளைமேற்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் உள்ள Smart Toch Control மூலம் வீடியோ ஆப் நேவிகேஷன், மியூசிக் பிளேபேக் மற்றும் கேமரா கட்டுப்பாடுகளை செய்ய முடியும். இதன் மூலம் ரிங் இணைக்கப்பட்டுள்ள செல்போனை கட்டுப்படுத்தலாம். இது எடை குறைவாக இருப்பதால், அணிவதற்கு மிகவும் சௌகரியமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். Smart Activity Tracking வசதியும் இருக்கிறது. வாக்கிங், ரன்னிங், ரைடிங் போன்ற ஆக்டிவிட்டிகளை டிராக்கிங் செய்து கொள்ள முடியும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாள் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது சிறப்பு சலுகை விலையில் ரூ. 2999க்கு விற்கப்படுகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் போட் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Microsoft CEO Satya Nadella Says AI’s Real Test Is Whether It Reaches Beyond Big Tech: Report
Apple Pay Reportedly Likely to Launch in India Soon; iPhone Maker Said to Be in Talks With Card Networks