ஆப்பிளின் புதிய 'பீட்ஸ் பவர்பிட்ஸ் ப்ரோ' அறிமுகம்!

பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் பீட்ஸ் பிரிவுக்குள்ளே வருகிறது.

ஆப்பிளின் புதிய 'பீட்ஸ் பவர்பிட்ஸ் ப்ரோ' அறிமுகம்!
விளம்பரம்

ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. ஏர்பாட்ஸ் 2 வெளியாகி சில நாட்களே ஆகிய நிலையில் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ அறிமுகமாகியுள்ளது. இந்த தயாரிப்பு ஸ்போர்ட்ஸ் மற்றும் கூடுதல் ஆடியோ வசதியை எதிர்பார்கும் நபர்களுக்குப் பொருந்தும். மேலும் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ தயாரிப்பு சுமார் 9 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பின் டிசைன் காதில் எளிதில் பொருந்தவும் அதே சமயத்தில் ஸ்டைலிஷ் அமைப்பையும் கொண்டுள்ளது.

பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ தயாரிப்பின் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த தயாரிப்பு இந்திய ரூபாயின் மதிப்பின்படி ரூ.17,000க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. 'விரைவில் வெளியாகும்' என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இந்த தயாரிப்பு ஐவரி, பிளாக், மோஸ் மற்றும் நேவி நிறங்களில் சந்தைக்கு வரும்.

இந்த தயாரிப்பு சிறந்த சவுண்டு குவாலிட்டி, கிளாஸ் 1 புளூடூத் கனெக்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ, ஆப்பிளின் ஹெச்1 சிப் மற்றும் 'ஹேய் சிரி' போன்றவைகளுடன் இணைந்து செயல்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான வயர்லெஸ் சார்ஜர்களை போல் இந்த தயாரிப்பிலும் சார்ஜிங் கேஸ் வசதி உள்ளது.

வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுள்ள இந்த பீட்ஸ் பவர்பீட்ஸ் ப்ரோ, 5 நிமிடம் சார்ஜ் செய்வதன் மீலம் 1.5 மணிநேரம் பாடல்களை கேட்க முடியும். மேலும் இதில் வால்யூம் கன்ட்ரோல் ஓவ்வோரு இயர்பட்ஸுக்கும் தனியாக அமைந்திருப்பதால் நமது விருபத்திற்கேற்ப வால்யூமை அட்சஜ்ட் செய்ய முடியும். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் ரூ. 10,000-க்குள் சோனி, JBL மற்றும் சவுண்ட்கோர் பிராண்டுகளின் சிறந்த நாய்ஸ்-கேன்சலிங் ஹெட்போன்கள்
  2. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: விவோ மற்றும் ஐகூ ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  3. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் டிவிகளுக்கான சிறந்த சலுகைகள்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 50,000-க்குக் குறைவான ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ANC உடன் கூடிய இயர்பட்ஸ்களில் சிறந்த சலுகைகள்
  6. கூகுள் பிக்சல் 11 சீரிஸ்: வெளியீட்டுத் தேதி, எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள், விவரக்குறிப்புகள் மற்றும் பல
  7. iQOO Neo 11 Ultra அறிமுக தேதி அறிவிக்கப்பட்டது; முக்கிய சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாயின
  8. Redmi K100 அறிமுகத்திற்கு முன் K110-க்கு பதிலாக K200 சீரிஸ் வரக்கூடும்: Redmi அதிகாரி தகவல்
  9. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  10. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »