இந்த ஆண்டு ஜூலை மாதம் சையோமி நிறுவனத்தை சேர்ந்த ஹுஆமி, அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அமேஸ்ஃபிட் பிப், ஸ்டிராடோஸ் மாடல்களை வரும் ஜூலை 24 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஆண்டுராய்டு, ஐஓஎஸ் போன்களில் ப்ளூடூத் மூலம் கனெக்ட் செய்யும் வசதிகளை கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், சதுர வடிவில் இருக்கும் அமேஸ்ஃபிட் பிப், 99 அமெரிக்க டாலர்களுக்கும் (6,800 ரூபாய்), வட்ட வடிவிலான அமேஸ்ஃபிட் ஸ்டிராடோஸ் ஸ்மார்ட் வாட்ச் 199.99 அமெரிக்க டாலர்களுக்கும் (13,600 ரூபாய்) அறிமுகம் செய்யப்பட்டது
ஹுஆமி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் ஸ்மார்ட் வாட்சுகளின் அறிவிப்பை வெளியிட்டது.
அமேஸ்ஃபிட் பிப் குறிப்புகள்
1.28 இன்ச் ஆன்-கலர் டிஸ்ப்ளே 176x176 பிக்சல் ரிசல்யூசனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே ஸ்கிரீன் 2.5டி கொரிலா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. ஐபி68 சான்றிதழ் கொண்ட பிபிஜி ஹார்ட் ரேட் சென்சார், ஆக்செலரேஷன் சென்சார், ஜியோமாக்னெடிக் சென்சார், பாரோமெட்ரிக் சென்சார், ஜிபிஎஸ் ஆகியவை கொண்டுள்ளது. மேலும் 190mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், நான்கு மாதங்கள் வரை தாங்க கூடிய பேட்டரி பேக்-அப் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர் பயன்பாட்டின் போது, 30 நாட்களுக்கு வரை பேட்டரி தாங்கும் என ஹூஆமி அறிவித்துள்ளது
அமேஸ்ஃபிட் ஸ்டிராடோஸ் குறிப்புகள்
1.34 இன்ச் வட்ட வடிவிலான டிஸ்ப்ளே 300x300 பிக்சல் ரிசல்யூசனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே ஸ்கிரீன் 2.5டி கொரிலா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது. 1.2GHz டூயல் கோர் SoC, 512எம்பி RAM , 4 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஆர் ப்ரசர் சென்சார், ஆம்பியண்ட் லைட் , ஜிரோஸ்கோப், ஜியோமாக்னெடிக் சென்சார், ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் சென்சர் ஆகியவை கொண்டுள்ளது. மேலும், வாட்டர் ரெசிஸ்டண்ட் 290mAh லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டது.
இரண்டு ஸ்மார்ட் வாட்சுகளுமே ஸ்டிராப் சேஞ்ச் வசதி, ப்ளூடூத் v4.0 LE கனெக்டிவிட்டி வசதிகள் கொண்டுள்ளது. கூடுதலாக, ஸ்டிராடோஸ் ஸ்மார்ட் வாட்சில் Wi-Fi 802.11 b/g கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்