ஹெட்ஃபோன் தயாரிப்பாளரான 1மோர், தனது சமீபத்திய உற்பத்தியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 1மோரின் இந்த டூயல் டைனாமிக் டிரைவர் புளூடூத் ஹெட்போன்ஸ், காதுகளில் மிகவும் கச்சிதமாக பொருந்தும் தன்மையை கொண்டது.
நெக்பேண்ட்,பேட்டரி மற்றும் கன்டிரோல்கள் பயனிட்டாளருக்கு அருகாமையில் பொருத்தப்பட்டிருக்கும். தற்போது முன்பதிவு மட்டும் ரூ.4,499 க்கு தொடங்கியுள்ள நிலையில்,இந்த ஸ்டைலீஷ் புளூடூத் ஹெட்ஃபோன் ரூ.7,499க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
முன்பதிவுகளை 1மோர் இந்தியாவின் வலைதளத்திலோ அல்லது ஆன்லையின் போர்டல் ஹெட்போன்ஜோனிலோ பெறலாம். கிராமி விருது ஒலி பொறியாளரான லூகா பிக்னார்டியுடன் இணைந்து இந்த ஹெட்செட்டின் ஆடியோ டியுனிங்கை செய்திருப்பதால், தரமான ஹெட்செட்டாக இருக்கும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
தனது பெயரைப்போல் டூயல் டைனாமிக்காக இந்த ஹெட்போன்ஸ் நெக்பேண்டாகவும், இயர்போன்களின் பரிமானவாகவும் திகழ்கிறது. ‘ஐயிஸ் ஆப் மீட்நைட்' (கருப்பு) மற்றும் ‘சிட்டி ஆப் ரோசஸ்' (ரோஸ்) என இரண்டு நிறங்களில் வெளியாகவுள்ளது. முன்பதிவுகள் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்குகின்ற நிலையில் குறைந்தபட்ச விலையுடன் கூடிய முன்பதிவு வரும் பிப்ரவரி 5 வரை வாங்க முடியும்.
வேகமாக சார்ஜ் செய்யும் சக்தியுடன் 3 மணி நேரம் வரை சார்ஜபிள் பேட்டரியின் ஆயுள் என பல அம்சங்களை இந்த புதிய 1மோர்ஹெட்போன் கொண்டுள்ளது. 1,000 ரூபாய்கும் குறைவான ஹெட்போன்களின் வகைகளில் தனக்கென நல்ல இடத்தை பெற்ற பிஸ்டன் பிட், 1 மோர் நிறுவனத்தை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்