Vivo T3 Lite 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக Vivo நிறுவனம் அறிவித்துள்ளது. விவோவின் T3 வரிசையில் இது மூன்றாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். மார்ச் மாதத்தில் T3 அறிமுகப்படுத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் Vivo T3x அறிமுகமானது. Vivo T3 Lite 5G ஆனது Sony AI கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்பதை தகவல்கள் உறுதிப்படுத்துகிறது.
விவோ நிறுவனம் தனது புதிய Vivo T3 Lite 5G ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை பிளிப்கார்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் Vivo T3 Lite 5G போன் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் வெளியான இந்த விவோ போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.