Photo Credit: Vivo
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Vivo T3 Ultra செல்போன் பற்றி தான்.
Vivo T3 Ultra செல்போன் இந்தியாவில் செப்டம்பர் 12ல் வெளியாகும் என்பது உறுதியானது. Vivo T3 Pro , Vivo T3 5G , Vivo T3 Lite 5G மற்றும் Vivo T3x 5G உள்ளடக்கிய சீரியஸ் செல்போன்களில் இணைகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் இயங்கும் என தெரியவந்துள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 9200+ SoC சிப்செட் இருக்கும் ஆக்டா-கோர் சிப்செட்டை கொண்டுள்ளது.
Vivo T3 அல்ட்ரா 6.77-இன்ச் 1.5K 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 4,500nits உச்ச பிரகாசத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது MediaTek Dimensity 9200+ SoC ஐக் கொண்டு 12GB வரை ரேம் மற்றும் 256GB வரையிலான மெமரியுடன் வருகிறது. Vivo T3 அல்ட்ரா ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) சப்போர்ட் உடன் 50-மெகாபிக்சல் Sony IMX921 முதன்மை சென்சார் கேமரா மற்றும் பின்புறத்தில் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டரைப் பெறுகிறது. முன் கேமரா ஸ்லாட்டில் 16 மெகாபிக்சல் சென்சார் கேமரா இருக்கலாம்.
Vivo T3 Ultra ஆனது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,500mAh பேட்டரியை கொண்டிருக்கும். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான அல்ட்ரா-ஸ்லிம், IP68 மதிப்பீட்டைக் கொண்டதாக தொலைபேசி உள்ளது. பாதுகாப்பிற்காக, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இரட்டை ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP68-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வந்துள்ளது. AnTuTu பெஞ்ச்மார்க் தேர்வில் 1,600K+ மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது இதன் டிஸ்பிளே மிக வேகமான 3D வளைந்த திரை எனக் கூறப்படுகிறது.
ஃப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோரில் வாங்குவதற்கு இது கிடைக்கும். விலையைப் பொறுத்தவரை, Vivo T3 அல்ட்ரா இந்தியாவில் ரூ. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் 30,999 ரூபாய். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் முறையே ரூ. 32,999 மற்றும் முறையே ரூ. 34,999 விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ரோஸ்ட் கிரீன் மற்றும் லூனா கிரே வண்ணங்களில் கிடைக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்