Vivo T3 Lite 5G போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
Photo Credit: Flipkart
விவோ நிறுவனம் தனது புதிய Vivo T3 Lite 5G ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதனை பிளிப்கார்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் Vivo T3 Lite 5G போன் இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைனில் வெளியான இந்த விவோ போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
தரமான MediaTek Dimensity 7200 சிப்செட் வசதியுடன் இந்த Vivo T3 Lite 5G ஸ்மார்ட்போன் வருகிறது. இதனால் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Mali-G57 MP2 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது.
ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். Vivo T3 Lite 5G 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக மெமரி நீட்டிப்பு செய்யலாம். மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. இதனால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உள்ளது.
Flipkart microsite கருத்துபடி , Vivo T3 Lite 5G ஆனது "மின்னல் வேக செயலி" மூலம் இயக்கப்படும். இது இந்தியாவின் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் என்று நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Sony AI கேமராவும் இருக்கும். 5000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பேட்டரியை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
Vivo T3 Lite 5G யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு வசதிகள் உள்ளது. ரூ.12,000 பட்ஜெட்டில் இந்த விவோ போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Neutrino Detectors May Unlock the Search for Light Dark Matter, Physicists Say
Uranus and Neptune May Be Rocky Worlds Not Ice Giants, New Research Shows
Steal OTT Release Date: When and Where to Watch Sophie Turner Starrer Movie Online?
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video