இந்த திட்டம் ரஷ்யாவுடன் நெருக்கமான மற்றும் ஆழமான உறவுக்கு வழிவகுக்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்திற்காக, நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதிக்குள் ரஷ்யாவுக்குச் சென்று பயிற்சியை தொடங்க உள்ளனர்.