தேவையற்ற எஸ்எம்எஸ், அழைப்புகளை தடுப்பதற்கான கட்டுப்பாட்டை இந்திய தொலைதொடர்பு ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் மெசேஜ், மார்க்கெட்டிங் அழைப்புகளை பிளாக்செயின் தொழில்நுட்பங்கள் மூலம் குறிப்பிட்ட சந்தாதாரர்களுக்கு மட்டும் அனுப்புவதற்கான புதிய கட்டுப்பாட்டை இந்திய தொலைதொடர்பு ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது தேவையற்ற அழைப்புகள் தவிர்க்கப்படுவதுடன் தேவையற்ற அழைப்புகள் தவிர்க்கப்படும். "பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நிறுவனம் டிராய்தான்" என்று டிராய் தலைவர் ஆர். எஸ். சர்மா கூறினார்.
நுகர்வோர் முன்னுரிமையிலான வர்த்தக தொலைத்தொடர்பு விதிமுறைகள் எனப்படும் இந்த கட்டுப்பாடு குறித்து 2018 ஜூன் 11 பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
வாடிக்கையாளரின் விருப்பம் மற்றும் டெலிமார்க்கெட்டிங் முகவர்களுடனான தகவல்களை பதிவு செய்யும். வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் பதிவு செய்து வருகின்றன. ஆனால், இந்த புதிய முறையில் அங்கீகரிக்கப்பட் முகவர்கள் மட்டுமே வாடிக்கையாளர்களின் தகவலைப் பெற முடியும்.
இதுகுறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில் முகவர்கள், டெலிமார்க்கெட்டிங் மெசேஜ்களை அனுப்ப முடியும். இல்லையெனில் அவர்களைத் தொந்தரவு செய்ய முடியாது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்