Photo Credit: China Telecom
M2003J15SC மாதிரி எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போன் சீன சான்றிதழ் தளமான TENAA-வின் தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டது. இந்த போன் ரெட்மி 10 எக்ஸ் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனா டெலிகாமின் சமீபத்திய பட்டியல், ஸ்மார்ட்போனின் சில புதிய அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. Helio G85 செயலியுடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கலாம். இதன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன. அவை இந்த ரெட்மி போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
ரெட்மி 10 எக்ஸ் விலை (எதிர்பார்க்கப்படுபவை)
சீனா டெலிகாமின் பட்டியலின்படி, Redmi 10X-ன் விலை சீனாவில் சிஎன்ஒய் 1,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,000)-யில் இருந்து தொடங்கும். இந்த போன் ஸ்கை ப்ளூ, பைன் மார்னிங் கிரீன் மற்றும் ஐஸ் ஃபாக் வைட் வண்ணங்களில் கிடைக்கும். இந்த போன் ஏப்ரல் 27 வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நேரத்தில், போனின் விற்பனை மற்றும் வெளியீட்டு தேதி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ரெட்மி 10 எக்ஸ் விவரங்கள் (எதிர்பார்க்கப்படுபவை)
இந்த போனில் டூயல்-சிம் ஸ்லாட் உள்ளது. இது மெல்லிய பெசல்களுடன் 6.53 இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் வரும். போனில் MediaTek Helio G85 செயலி இருக்கும். அதனுடன் 6 ஜிபி ரேம் வழங்கப்படும். புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட MIUI 11 ஓஎஸ் இருக்கும்.
ரெட்மி 10 எக்ஸ்ஸின் பின்புறத்தில் நான்கு கேமராக்களை காணலாம். இந்த தொகுதியில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா சென்சார்கள் இருக்கும். செல்பிக்கு, ஹோல்-பஞ்ச் கட்அவுட்டில் 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
ரெட்மியின் இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் பற்றிய தகவல்கள் உள்ளன. ரெட்மி 10 எக்ஸ்ஸில் 5020 எம்ஏஎச் பேட்டரி வேலை செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த போன் 162.38 x 77.2 x 8.95 மிமீ அளவு மற்றும் 205 கிராம் எடையுள்ளவை என்று பட்டியல் கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்