ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் டெலிகாம் சேவையில் இணைந்தபின் மிகப்பெரிய நெட் ஒர்க்குடன் தனது சேவையை இணைக்க உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரயில்வேயிக்கான டெலிகாம் சேவையை ஜியோ தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ரயில்வேயின் தொலை தொடர்புக்கான செலவில் 30 சதவீதம் குறையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தை டெலிகாம் சேவைக்காக ரயில்வே ஆறு வருடங்களாக பயன்படுத்தி வந்தது. அதன் மூலம் 1.95 மொபைல் போன் இணைப்புகள், ரயில்வே ஊழியர்களால பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதற்காக ஒவ்வொரு வருடமும் ரயில்வே நிர்வாகம் ரூ.100 கோடியை கட்டணமாக செலுத்தி வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒப்பந்தம் வரும் டிசம். 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதுகுறித்த அறிக்கையை ரயில்வே நிர்வாகம் நவ. 20 தேதி அறிவித்தது அதில், ரயில்டெல் நிறுவனத்திற்கான மொபைல் போன் இணைப்பு வழங்கும் உரிமத்தை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
புதிய டெலிகாம் சேவை ஜன.1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ரிலையன்ஸ் ஜியோ புதிய சலுகைகளைக் கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதில் 4ஜி/3ஜி இணைப்புகள் மற்றும் இலவச கால்கள் அடங்கும்.
மேலும், ரயில்வே மூத்த அதிகாரிகளுக்கு ரூ.125க்கு 60ஜிபி பிளான் வழங்கப்பட உள்ளது. இணை செயலாளர் போன்றோருக்கு ரூ.99க்கு 45ஜிபி பிளான் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சி'கட்ட பணியாளர்களுக்கு ரூ 67க்கு 30 ஜிபி மற்றும் ரூ.49க்கு அன்லிமிடெட் எஸ்.எம்.எஸ்கள் பிளான் வழங்கப்பட உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்