கடும் வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது கேரளா. கூகுள் மற்றும் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல் போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் மூலம் உதவி வருகின்றன. பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மூலம் 30 கோடி ரூபாய் நிதி சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம், மெர்சி கார்ப்ஸ் அமைப்பின் சார்பாக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் 1.5 கோடி ரூபாய் நிவாரண நிதிக்கு செலுத்தியுள்ளது. ஐடியா நிறுவனம் நீரில் மூழ்கிய பழைய சிம் கார்டுக்கு பதிலாக இலவசமாக சிம் கார்டுகள் வழங்குகிறது.
பேடிஎம் நிறுவனம் தனது 12 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 30 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இந்த தொகை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் பிளேஸ்டோர் மற்றும் ஐ ட்யூன்ஸ் மூலமாக நிதி திரட்டி வருகிறது ஆப்பிள். வாடிக்கையாளர்கள் 250 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை நிதி செலுத்தலாம். சாம்சங் நிறுவனம் 1.5 கோடி ரூபாய் நிதியோடு, 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட நிவாரண முகாமையும் அமைத்து தர உள்ளது. அந்த முகாமில் மொபைல் போன் சார்ஜர்கள், சாம்சங் ஃபிரிட்ஜ் மற்றும் மைக்ரோ வேவ் ஓவனும் வைக்கப்படும் என்று சாம்சங் கூறியுள்ளது.
ஐடியா நிறுவனம், நிவாரண முகாம்களில் போன் பூத்கள் அமைத்துள்ளது. இதை பயன்படுத்தி மக்கள் இலவசமாக கால் செய்து கொள்ளலாம். முன்னதாக 1984 என்ற சேவை எண்ணுக்கு அழைத்து, வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் மொபைல் எண்ணைக் கொடுத்தால், அவர்களின் இருப்பிடத்தை டிராக் செய்யும் சேவையை இலவசமாக செய்து வந்தது ஐடியா நிறுவனம். ஐடியா எண் வைத்திருப்பவர்களை மட்டுமே ட்ராக் செய்ய முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்