ஆப்பிள் நிறுவனம் தனது 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது
Photo Credit: Apple
ஆப்பிள் 250 கோடி ஆக்டிவ் டிவைஸ்கள் சாதனை; 2026 Q1-ல் இந்தியா அசுர வளர்ச்சி வெளிப்பாடு
இன்னைக்கு நாம பார்க்கப்போறது ஒரு 'மொரட்டுத்தனமான' பிசினஸ் அப்டேட். ஆப்பிள் (Apple) நிறுவனத்தை பத்தி உங்களுக்குத் தெரியும், அவங்க ஏதாவது பண்ணா அது உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி தான் இருக்கும். இப்போ அவங்க வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டின் முதல் காலாண்டு (Q1 2026) ரிப்போர்ட், ஒட்டுமொத்த டெக் உலகத்தையுமே ஆச்சரியப்பட வச்சிருக்கு. ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக் (Tim Cook) ஒரு செம அறிவிப்பை வெளியிட்டுருக்காரு. இப்போ உலகம் முழுக்க சுமார் 250 கோடி ஆப்பிள் சாதனங்கள் (iPhones, Macs, iPads, Watches) மக்களோட கையில ஆக்டிவ்-ஆ இருக்காம். போன வருஷம் இது 235 கோடியா இருந்துச்சு, இப்போ வெறும் ஒரு வருஷத்துல 15 கோடி புது டிவைஸ்கள் ஆட் ஆகியிருக்கு. யோசிச்சுப் பாருங்க, உலகத்துல இருக்குற மூணுல ஒருத்தர் கிட்ட ஆப்பிள் டிவைஸ் இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு.
ஆனா இதுல நமக்கு பெருமையான விஷயம் என்ன தெரியுமா? இந்த வளர்ச்சிக்கு இந்தியா தான் ஒரு மிகப்பெரிய காரணமா இருக்கு. டிம் குக் தன்னோட பேச்சில இந்தியாவைப் பத்தி ரொம்பவே சிலாகிச்சு பேசியிருக்காரு. "இந்தியால எங்களுக்கு ஒரு 'டெரிஃபிக்' (Terrific) குவார்ட்டர் அமைஞ்சிருக்கு"னு அவரே சொல்லியிருக்காரு. இந்தியால இப்போ ஐபோன் மட்டும் இல்லாம, மேக் (Mac) மற்றும் ஐபேட் (iPad) விற்பனையும் தாறுமாறா எகிறியிருக்கு. குறிப்பா, ஆப்பிள் போன் வாங்குறவங்கள்ள பெரும்பாலானவங்க முதல் முறையா ஆப்பிள் உலகத்துக்குள்ள வர்றவங்களாம் (Switchers). இதனாலதான் ஆப்பிள் நிறுவனம் இந்தியால தங்களோட ரீடைல் ஸ்டோர்களை அதிகப்படுத்திக்கிட்டே போறாங்க. டிசம்பர்ல 5-வது ஸ்டோரை திறந்துட்டாங்க, அடுத்து மும்பைல இன்னொன்னு வரப்போகுது.
இந்த 2026 ரிப்போர்ட்ல ஹீரோ யாருன்னு பார்த்தா அது நம்ம iPhone 17 சீரிஸ் தான். செப்டம்பர்ல லான்ச் ஆன இந்த போன், டிசம்பர் மாசத்துல மட்டும் ஆப்பிளுக்கு சுமார் $85 பில்லியன் (கிட்டத்தட்ட ரூ. 7 லட்சம் கோடி!) வருமானத்தை அள்ளிக் கொடுத்திருக்கு. டிம் குக் இதைப் பத்தி சொல்லும்போது, "டிமாண்ட் அப்படியே ஸ்டாக்கரிங்கா (Staggering) இருக்கு, எங்களால சப்ளை கூட ஈடுகொடுக்க முடியல"னு சொல்லியிருக்காரு.
வெறும் ஹார்டுவேர் மட்டும் இல்லாம, சாப்ட்வேர்லயும் ஆப்பிள் இப்போ மிரட்டப் போறாங்க. கூகுள் (Google) கூட கை கோர்த்து 'ஜெமினி' (Gemini) மூலமா ஒரு பவர்ஃபுல் 'AI Siri'-யை கொண்டு வரப்போறாங்க. இது வர்ற பிப்ரவரி மாசமே ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்குனு சொல்றாங்க. போன்ல இருக்குற சிரி (Siri) இனிமே வெறும் வாய்ஸ் அசிஸ்டன்ட் மட்டும் இல்லாம, ஒரு சாட்-பாட் மாதிரி நம்ம கூட பேசப்போகுது.
ஆப்பிள் இந்த ஒரு காலாண்டுல மட்டும் ஈட்டிய மொத்த வருமானம் $143.8 பில்லியன். இது இந்திய மதிப்புல சுமார் ரூ. 12 லட்சம் கோடிக்கும் அதிகம்! லாபம் மட்டுமே ரூ. 3.5 லட்சம் கோடி. இந்த அளவுக்கு ஒரு கம்பெனி வளருதுனா அதுக்கு அவங்க மேல மக்கள் வச்சிருக்கற நம்பிக்கையும், அந்த பிராண்ட் வேல்யூவும் தான் காரணம். முடிவா சொல்லணும்னா, ஒரு காலத்துல ஆப்பிள் போன் வச்சிருக்கிறது ஒரு ஆடம்பரமா இருந்துச்சு, ஆனா இப்போ இந்தியாவுல அது ஒரு தவிர்க்க முடியாத அங்கமா மாறிடுச்சு.நீங்க என்ன நினைக்கிறீங்க மக்களே? ஆப்பிள் போன் வாங்குறது இப்போ ஒரு ட்ரெண்டா இல்ல அதுல இருக்குற குவாலிட்டிக்காக வாங்குறாங்களா? உங்களுக்கு ஆப்பிள்ல பிடிச்ச டிவைஸ் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Sony Announces Prism Collection of Transparent DualSense Controllers and PS5 Console Covers
Google Chrome's Autofill Feature Can Now Pull Details You Need Straight From Your Gmail Inbox