மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய G-சீரிஸ் ஸ்மார்ட்போன்களான Moto G67 மற்றும் G77-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: Motorola
Moto G67, G77 அறிமுகம்; 108MP கேமரா, 1.5K 120Hz AMOLED, 5000mAh பேட்டரி விவரங்கள்
ஸ்மார்ட்போன் மார்க்கெட்ல இப்போ போட்டி அனல் பறக்குது. ஒரு பக்கம் ரெட்மி நோட் 15 சீரிஸ் (Redmi Note 15 Pro+) மிரட்டிக்கிட்டு இருக்குறப்போ, அவங்களுக்கு ஈடுகொடுக்க மோட்டோரோலா (Motorola) தன்னோட ரெண்டு முக்கியமான ஆயுதங்களை களம் இறக்கியிருக்காங்க. அதுதான் Moto G67 மற்றும் Moto G77. இந்த போன்களை பார்த்தா "இது என்னப்பா மிட்-ரேஞ்ச் போனா இல்ல பிளாக்ஷிப் போனா?"னு கேக்குற அளவுக்கு இருக்கு. வாங்க, இதுல அப்படி என்னதான் இருக்குன்னு முழுசா பாக்கலாம். ரெண்டு போன்லயுமே இருக்குற மிக முக்கியமான அம்சம் இதோட டிஸ்ப்ளே தான். வழக்கமா பட்ஜெட் போன்கள்ல Full HD டிஸ்ப்ளே தான் பார்ப்போம். ஆனா மோட்டோ இதுல 6.78 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவை கொடுத்திருக்காங்க. இதுல 120Hz ரிஃப்ரெஷ் ரேட் இருக்குறதால, நீங்க இன்ஸ்டாகிராம் ஸ்க்ரோல் பண்ணும்போதோ இல்ல கேம் விளையாடும்போதோ அசாத்தியமான வேகம் இருக்கும். 1.5K கிளாரிட்டி இருக்குறதால வீடியோக்கள் எல்லாம் செம ஷார்ப்பா, நேச்சுரலா தெரியும். சினிமா பிரியர்களுக்கு இது ஒரு செம ட்ரீட்.
கேமரா - 108MP vs 50MP கேமரால ரெண்டு போனுக்கும் ஒரு சின்ன வித்தியாசம் இருக்கு.
● Moto G77: இதுல 108 மெகாபிக்சல் மெயின் கேமரா இருக்கு. நீங்க எடுக்குற போட்டோவை எவ்வளவு ஜூம் பண்ணாலும் குவாலிட்டி குறையாது. லோ-லைட் போட்டோகிராபிக்கும் இது சூப்பரா சப்போர்ட் பண்ணும்.
● Moto G67: இதுல 50 மெகாபிக்சல் கேமரா இருக்கு. மெகாபிக்சல் கம்மியா
இருந்தாலும், இதோட சென்சார் குவாலிட்டி ரொம்ப நல்லா இருக்குறதால நல்ல தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும். ரெண்டு போன்லயுமே 16MP செல்ஃபி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் கொடுத்திருக்காங்க.
மோட்டோ போன்கள்னாலே நமக்கு முதல்ல ஞாபகம் வர்றது அவங்களோட Clean Android அனுபவம் தான். இந்த போன்ல தேவையற்ற விளம்பரங்களோ இல்ல நம்ம டெலீட் பண்ண முடியாத 'ப்ளோட்வேர்' (Bloatware) ஆப்ஸோ இருக்காது. இதுல லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் மற்றும் மீடியாடெக் சிப்செட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கு (வேரியண்ட்டை பொறுத்து). மல்டி-டாஸ்கிங் பண்றதுக்கும், நார்மல் கேமிங்கிற்கும் இது ரொம்பவே ஸ்மூத்தா இருக்கும்.
5,000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இது வருது. காலையில சார்ஜ் போட்டா நைட் வரைக்கும் கவலை இல்லாம யூஸ் பண்ணலாம். மோட்டோரோலாவின் அந்த ஸ்டைலிஷ் டிசைன் மற்றும் கையில பிடிக்குறப்போ இருக்குற அந்த 'கிரிப்' இந்த போனுக்கு ஒரு பிரீமியம் லுக்கைக் கொடுக்குது.
நீங்க ஒரு ரெட்மி நோட் 15 ப்ரோ+ (Redmi Note 15 Pro+) வாங்க யோசிக்கிறீங்க, ஆனா உங்களுக்கு அந்த MIUI/HyperOS-ல இருக்குற விளம்பரங்கள் பிடிக்காதுனா, நீங்க கண்ணை மூடிக்கிட்டு இந்த Moto G77-க்கு போகலாம். சுத்தமான ஆண்ட்ராய்டு வேணும், அதே சமயம் சூப்பரான டிஸ்ப்ளேவும் கேமராவும் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான சாய்ஸ்.விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமா இன்னும் ஒரு சில தினங்கள்ல இந்தியாவுல அறிவிக்கப்பட இருக்கு. ஆனா, இது ஒரு 'Value for Money' போனா தான் இருக்கும்னு டெக் வட்டாரத்துல பேசப்படுது. இந்த போனை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? 108MP கேமரா முக்கியமா இல்ல கிளீன் ஆண்ட்ராய்டு முக்கியமா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Google Maps Is Adding Gemini Support for Walking and Cycling Navigation