விவோ நிறுவனம் தனது புதிய மாடலான Vivo Y31d-ஐ அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: Vivo
விவோ Y31d: 7200mAh பேட்டரி, Snapdragon 6s 4G, 50MP, IP69+ — ~₹11,990 (எதிர்பார்ப்பு)
இன்னைக்கு நாம பார்க்கப்போறது ஒரு 'சைலன்ட்' ஆனா 'வயலன்ட்' அப்டேட். விவோ (Vivo) நிறுவனம் எந்த ஒரு பெரிய ஆர்ப்பாட்டமும் இல்லாம, ரொம்ப அமைதியா தன்னோட புதிய மாடலான Vivo Y31d-ஐ மார்க்கெட்ல இறக்கியிருக்காங்க. இந்த போனை பார்த்தா "என்னப்பா விவோ இப்படி ஒரு வித்தையை இறக்கியிருக்காங்க?"னு நினைக்க தோணுது. ஏன்னா, இதுல இருக்குற வசதிகள் அப்படி. முதல்ல நம்ம எல்லாரையும் வாயடைக்க வைக்கிறது இதோட பேட்டரி தான். 2026-ல கூட நாம 5,000mAh பேட்டரியை தான் அதிகமா பார்க்குறோம். ஆனா விவோ இதுல அசால்ட்டா 7,200mAh பேட்டரியை உள்ள வச்சிருக்காங்க. ஒரு தடவை சார்ஜ் பண்ணா, நீங்க பாட்டுக்கு ரெண்டு நாளைக்கு நிம்மதியா இருக்கலாம். வீடியோ பாக்குறது, கேம் விளையாடுறதுனு எதை பண்ணாலும் சார்ஜ் சல்லுனு குறையாது. "சார்ஜரை வீட்லயே மறந்துட்டு வந்துட்டேனே"னு இனி யாரும் ஃபீல் பண்ண தேவையில்லை.
அடுத்த மொரட்டுத்தனமான ஃபீச்சர் இதோட IP69 ரேட்டிங். பொதுவா பெரிய பெரிய பிரீமியம் போன்கள்ல தான் இந்த ரேட்டிங்கை பார்ப்போம். இதுக்கு என்ன அர்த்தம்னா, உங்க போன் மேல தூசி படிஞ்சாலும் சரி, இல்ல தெரியாம தண்ணிக்குள்ள விழுந்தாலும் சரி, ஏன்... அதிக பிரஷர் இருக்குற சுடுதண்ணி பட்டாலும் கூட இந்த போன் அசால்ட்டா தாங்கும். பட்ஜெட் விலையில இப்படி ஒரு பாதுகாப்பை கொடுத்த விவோ-வுக்கு ஒரு 'ஓ' போடலாம்!
"எல்லாம் சரிப்பா, ஆனா இதுல என்னதான் குறை?"னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது. அதுதான் இதோட சிப்செட். இந்த 2026-ல நாம எல்லாரும் 5G வேகத்துக்கு மாறிட்டோம். ரெட்மி நோட் 15 ப்ரோ+ (Redmi Note 15 Pro+) போன்ற போன்கள் 5G-ல மிரட்டிட்டு இருக்குறப்போ, விவோ இந்த போன்ல 4G-only Snapdragon சிப்செட்டை கொடுத்திருக்காங்க.
ஏன் இப்படி பண்ணாங்கனு யோசிச்சா, இது முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட ஆடியன்ஸை டார்கெட் பண்ணி வந்திருக்கு. உதாரணத்துக்கு, அதிக நேரம் வெளியவே இருக்குற டெலிவரி பார்ட்னர்கள், டிராவல் பண்றவங்க, அல்லது போன் அதிகமா கீழ விழ வாய்ப்பு இருக்குற இடத்துல வேலை செய்றவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அவங்களுக்கு 5G-யை விட பேட்டரியும், போனோட உறுதியும் தான் முக்கியம்.
விலைக்கு ஏத்த மாதிரி ஒரு டீசண்டான கேமரா செட்டப் இதுல இருக்கு. முக்கியமா டிஸ்ப்ளே நல்லா பிரைட்டா இருக்கறதால, வெளியில வெயில்ல யூஸ் பண்ணும்போது கஷ்டமா இருக்காது. டிசைன் பார்க்குறதுக்கு விவோ-வோட மத்த பிரீமியம் போன்கள் மாதிரியே ரொம்ப ஸ்லிம்மா, ஸ்டைலிஷா இருக்கு. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் போன் ரொம்ப குண்டா இல்லாம இருக்குறது தான் இதோட இன்ஜினியரிங் வித்தை!
உங்களுக்கு 5G நெட்வொர்க் தேவையில்லை, ஆனா போன்ல சார்ஜ் நிிக்கணும், அப்புறம் போன் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும்னு நினைச்சீங்கன்னா, இந்த Vivo Y31d-ஐ கண்ணை மூடிக்கிட்டு வாங்கலாம். ஆனா நீங்க ஒரு ஹெவி கேமராவோ அல்லது 5G ஸ்பீடோ எதிர்பார்க்குற ஆளா இருந்தா, நீங்க மத்த ஆப்ஷன்களை பார்க்கலாம்.இந்த 'சைலன்ட்' லான்ச் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? 4G போன் இந்த காலத்துல தேவையா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்