Photo Credit: Flipkart
ஹானர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஹானர் 10 லையிட், ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருவதாக கடந்த செவ்வாயன்று அறிவிப்பு வெளியானது. அதைதொடர்ந்து தற்போது வரும் 15 ஆம் தேதி இந்த புதிய ஸ்மார்ட் போன் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஹானர் 10 லைட் ஸ்மார்ட் போனுக்காக தனியாக ஒரு பக்கத்தை ஒதிக்கியுள்ளது. க்ரின் 710- எஸ்.ஓ.சி -யில் இயங்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன், 24 மெகா பிக்சல் கேமரா மற்றும் சாய்வு (gradient) பின்புற பேனல்களை கொண்டுள்ளது.
மேலும் இணையதளத்தில் உள்ள தகவல்கள் படி நிறம் வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் இது விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த போன் நாடுமுழுவதும் ஃப்ளிப்கார்ட்டின் தளத்தில் மட்டுமே வாங்க முடியும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியுள்ள நிலையில், அந்த ஸ்மார்ட் போன் (4ஜிபி ரேமும் / 64 ஜிபி நினைவகத்தையும்) ரூ.14,000- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதே மாடல் ஸ்மார்ட் போனின் 6 ஜபி ரேமும் / 64 ஜிபி நினைவகத்தையும் கொண்ட ஸ்மார்ட் போன் ரூ.17,500 -க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் 6 ஜிபி ரேமும் /128 ஜிபி நினைவகமும் கொண்ட ஸ்மார்ட் போன் ரூ.19,500 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவிலும் இதேபோன்ற விலைவாசி இருக்க வாய்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஹானர் 10 லைட் ஆண்டிராய்டு 9.0 பைய் -யில் இயங்குகிறது. இந்த புதிய தயாரிப்பில் புல் ஹெச்.டி.யை பயன்படுத்த முடியும். மேலும் 24- மெகா பிக்சல் கேமராவுடன் வரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் தன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்