Honor Gala Festival: ஹானர் காலா திருவிழா அடுத்த வாரத்தில் துவங்குகிறது. இதற்கான ஆன்லைன் விற்பனையானது, ஏப்.8ல் துவங்கி ஏப்.12 வரை நடைபெறுகிறது.
பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் ஹானர் 9N ஸ்மார்ட்போனும் இடம்பெற்றுள்ளது.
Honor Gala Festival Sale: ஹானர் காலா திருவிழா அடுத்த வாரத்தில் துவங்குகிறது. இதற்கான ஆன்லைன் விற்பனையானது, ஏப்.8ல் துவங்கி ஏப்.12 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழா விற்பனையில் ஹானர் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச் போன்ற அணிகலன்களும் இடம்பெற்றுள்ளன.
ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் இந்த தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த 5 நாட்கள் விற்பனையானது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் நடைபெற உள்ளது. இந்த ஹானர் திருவிழாவில் என்னென்ன போன்கள் இடம்பெறுகின்றன என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
ஹானர் காலா திருவிழா குறித்து அதிகார்ப்பூர்மாக வெளியான அறிவிப்பில், ஹானர் தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், டேப்லெட்ஸ் மற்றும் ஹெட்போன், இயர்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்ற பொருட்களும் தள்ளுபடியில் இடம்பெறுகின்றன. அந்த வகையில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் எந்தெந்த மாடல்கள் தள்ளுபடியில் கிடைக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஹானர் 9N, ஹானர் 9 லைட், ஹானர் 10 லைட் போன்கள் இடம்பெறுகின்றன, இதேபோல், ஹானர் 7A மற்றும் ஹானர் 7s போன்களும் இடம்பெற்றுள்ளன. சிறந்த அறிவிப்பாக ஹானர் 9i மற்றும் ஹானர் 10 போன்களும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் இடம்பெற்றுள்ளன.
இதுபோன்ற தள்ளுபடி விற்பனையை ஹானர் நிறுவனம் இந்தியாவில் அறிவிப்பது இது முதல்முறையல்ல, ஏற்கனவே பலமுறை இது போன்ற தள்ளுபடி விற்பனைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வரும் ஹானர் நிறுவனம், அதே பாணியையே தற்போதும் கடைப்பிடித்து வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Ultra Wallpaper Leak Hints at Possible Colour Options