ஸ்மார்ட்போன் வசதிகளை லேண்ட்லைனில் தரும் பிஎஸ்என்எல்

ஸ்மார்ட்போன் வசதிகளை லேண்ட்லைனில் தரும் பிஎஸ்என்எல்

Photo Credit: @karmadude/ Flickr

ஹைலைட்ஸ்
  • பிஎஸ்என்எல் லேண்ட்லைன் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது
  • எஸ்எம்எஸ், சாட்டிங் மற்றும் வீடியோ கால் ஆகிய நவீன வசதிகள்
  • ராஜஸ்தானிலிருந்து இந்த சேவைகளுக்கான வேலை துவக்கம்
விளம்பரம்

மொபைல் போனுடன் ஒப்பிட்டு பார்க்கையில் லேண்டுலைன் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்து வருகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் லேண்ட்லைனைப் பயன்படுத்துவது பிராட்பேண்டு வசதிக்காக என்றாகிவிட்டது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனம் நவீன வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.


போன் கால், எஸ்எம்எஸ், சாட்டிங், வீடியோ காலிங், கால் ட்ரான்ஸ்ஃபர் ஆகிய வசதிகளை லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் பெறலாம். இதற்காக 2ஜி செல்போன் டவர்கள் எல்லாம் 3ஜிக்கு மாற்றப்பட்டு வருகிறது.

இந்ததிட்டம் முதல்முறையாக ராஜஸ்தான் மாநிலம் பந்தி நகரில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அதிவேக இன்டர்நெட் வசதிக்காக 20 டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு வசதியாக பிஎஸ்என்எல் ஃபேமிலி பிளான் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி 1199க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 1ஜிபி வசதி கொண்ட 3 இணைப்புகளைத் தருகிறது. இத்தகவலை பந்தி மாவட்ட பிஎஸ்என்எல் மேளாலர் பி.கே. அகர்வால் தெரிவித்துள்ளார்.

Written with inputs from PTI

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Telecom, India, BSNL, Rajasthan
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »