பிஎஸ்என்எல் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டங்கள் ஒரு நாளைக்கு 10GB 4G டாட்டாவை வழங்குகிறது. புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ரூ. 96 மற்றும் ரூ. 236, மற்றும் முறையே 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. பிஎஸ்என்எல் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் 4G சேவைகளை வழங்கும் இடங்களில் மட்டுமே வழங்குகிறது. புதிய கவர்ச்சிகரமான திட்டங்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவை டேட்டா சலுகைகளை மட்டுமே வழங்குகின்றன. முன்னதாக பிஎஸ்என்எல் சமீபத்தில் தனது 75 நாட்கள் செல்லுபடியாகும் 1,098 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுருந்தது.
இரண்டு புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் - ரூ. 96 மற்றும் ரூ. 236 - ஒரு நாளைக்கு 10GB டேட்டா நன்மைகளை வழங்குகிறது. ரூ. 96 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ரூ. 236 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். மொத்தம் 280GB டேட்டா நன்மை பிஎஸ்என்எல் 96 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தால் வழங்கப்படுகிறது, மேலும் 840 ஜிபி டேட்டா நன்மை பிஎஸ்என்எல் 236 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தால் வழங்கப்படுகிறது.
டெலிகாம் டாக் (Telecom Talk) தகவலின்படி, பிஎஸ்என்எல் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அதன் 4G டேட்டாவை சேவை உள்ள இடங்களில் மட்டுமே வழங்குகிறது. 4G நெட்வொர்க் கொண்ட பகுதிகள் என பிஎஸ்என்எல் செயலில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மகாராஷ்டிரா உள்ளது, மேலும் அகோலா, பண்டாரா, பீட், ஜல்னா, ஒஸ்மானாபாத் மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகள் அதில் அடங்கும்.
இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுடன் அழைப்பு அல்லது பிற சலுகைகள் எதுவும் இலவசம் இல்லை, மேலும் புதிய சேவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த தரவுத் திட்டங்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
முன்பு குறிப்பிட்டதுபோல, பி.எஸ்.என்.எல் சமீபத்தில் தனது 1,098 ரூபாய் அளவற்ற தொலைபேசி அழைப்பு (மும்பை மற்றும் டெல்லி வட்டங்கள் உட்பட), ஒரு நாளுக்கு 100 மேசேஜ், 75 நாட்கள் வெலிடிட்டியுடன் 375GB டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்