பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது 186 ரூபாய் மற்றும் 187 ரூபாய் கொண்ட இரண்டு திட்டங்களை மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய மேம்பாட்டின்படி, நாளுன்றிற்கு 1GB அளவிலான டேட்டாவை கொண்ட இந்த இரண்டு திட்டங்களும், தற்போது நாளுன்றிற்கு 2GB டேட்டாவை கொண்டு அறிமுகமாகியுள்ளது. டேட்டாவுடன் அளவற்ற தொலைபேசி அழைப்புகளையும் தினமும் 100 மெசேஜ்களையும் இலவசமாக இந்த திட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. முன்னதாக, சமீபத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சில திட்டங்களுக்கு கூடுதல் டேட்டாவை அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 'சூப்பர் ஸ்டார் 300' என்ற ப்ராட்பேண்ட் சேவையையும அறிமுகப்படுத்திருந்தது.
பி.எஸ்.என்.எல் ஆந்திர பிரதேச தளத்தில் இந்த 186 ரூபாய் திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அந்த தளத்தின்படி, இந்த திட்டம் நாளுன்றிற்கு 2GB டேட்டாவை வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி, அளவற்ற தொலைபேசி அழைப்புகளும் தினமும் 100 மெசேஜ்களும் இந்த திட்டத்தில் இலவசம். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த 2GB டேட்டா முடிவடைந்தவுடன், வாடிக்கையாளர்கள் 40 Kbps வேகத்தில் அளவற்ற இன்டர்நேட் சேவையை பெறுவார்கள் என கூறியுள்ளது. இந்த திட்டம் டெல்லி மற்றும் மும்பை ஆகிய வட்டாரங்களிலும் அறிமுகமாகியுள்ளது.
இதே போல அம்சங்களை கொண்ட 187 ரூபாய் திட்டம் பி.எஸ்.என்.எல் கர்நாடகா தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டமும் நாளுன்றிற்கு 2GB டேட்டா, அளவற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் தினமும் 100 மெசேஜ்கள் இலவசமாக அளிக்கவுள்ளது.
மேலும், அக்டோபர் 1 வரை இந்த திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால், 2.2GB கூடுதல் டேட்டாவையும் அளிக்கவுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்