BSNL Broadband கட்டணம் திடீர் உயர்வு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

அதிகப்பட்சமாக 4ஜிபி CUL, 5ஜிபி CUL, சூப்பர் ஸ்டார் திட்டங்களின் மாதாந்திரக் கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன

BSNL Broadband கட்டணம் திடீர் உயர்வு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

அதிகபட்சமாக BSNL கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • BSNL will start charging subscribers as per the revision from August 1
  • The new change is applicable on a Pan-India basis
  • BSNL has brought the revision for both its new and existing subscribers
விளம்பரம்

BSNL நெட்வொர்க்கின் பிராட்பேண்டின் சில திட்டங்களின் கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பல்வேறு விதமான பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில மாதாந்திர பிளான்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் அமலுக்கு வருவதாக செய்திகள் வந்துள்ளன. 

அதன்படி, 2ஜிபி CUL மாதாந்திர பிராட்பேண்ட் பிளான் 349 ரூபாயிலிருந்து 369 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 8Mbps வேகத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 2ஜிபி டேட்டா முடிந்ததும் இணையத்தின் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும்.  பிஎஸ்என்எல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடேட் காலிங் சேவையும், பிற நெட்வொர்க்குகளுக்கு ரூ.600க்கான டாக்டைமும் வழங்கப்படுகின்றன. மேலும், இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரையில் இலவச நைட் காலிங் சேவைகளும் உள்ளன. 

இதே 2ஜிபி CUL திட்டத்தின் அடுத்த நிலையாக அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் காலிங் வசதி கொண்ட பிளானின் விலை 399 ரூபாய் ஆகும். இந்தக் கட்டணம் தற்போது 419 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அடுத்ததாக 3ஜிபி CUL திட்டத்தின் விலை 499 ரூபாயிலிருந்து 519 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் 2ஜிபி CUL இன் அத்தனை அம்சங்களும் அடங்குகிறது. ஆனால், 2ஜிபி டேட்டாவுக்குப் பதிலாக 3ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

அதிகப்பட்சமாக  4ஜிபி CUL, 5ஜிபி CUL, சூப்பர் ஸ்டார் திட்டங்களின் மாதாந்திரக் கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. 4ஜிபி CUL பிளானின் கட்டணம் ரூ.599 இலிருந்து ரூ.629 ஆகவும், 5ஜிபி CUL பிளானின் மாதாந்திர கட்டணம் ரூ.699 இலிருந்து ரூ.729 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டார் 300 பிளானின் கட்டணம் 749 ரூபாயிலிருந்து 779 ரூபாயாகவும், 15ஜிபி CUL திட்டத்தின் விலை 999 ரூபாயிலிருந்து 1,029 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில் சூப்பர் ஸ்டார் 300 பிளானில் வாடிக்கையாளர்களுக்கு 10 Mbps வேகத்தில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா காலியானதும் இணையத்தின் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது.


Is Mi Notebook 14 series the best affordable laptop range for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஐஓஎஸ் 26 அப்டேட் வந்தாச்சு! "லிக்விட் கிளாஸ்" டிசைன் முதல் அட்டகாசமான ஏஐ அம்சங்கள் வரை - என்னவெல்லாம் புதுசா இருக்கு
  2. ஒப்போ ஃபேன்ஸ் ரெடியா? புது Oppo F31 Pro+ 5G சீரிஸ்ல மூணு மாடல் வந்திருக்கு! பேட்டரி, கேமரான்னு வெறித்தனமான அம்சங்கள்
  3. பிக் பில்லியன் டேஸ் வருது! ரூ. 79,999 மதிப்புள்ள Nothing Phone 3 வெறும் ரூ. 34,999-க்கு கிடைக்குமா
  4. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா?
  5. iQOO 15 வெளிவந்தாச்சு! அதிரடியான லுக் மற்றும் கேமரா லீக்! புது போன் வாங்க காத்திருந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  6. பட்ஜெட் விலையில் பக்கா போன்! Poco M7 Plus 5G புதிய மாடல் வந்தாச்சு! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 11,000-க்குள்ள வாங்கலாம்
  7. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா
  8. iPhone 17 ஆர்டர் பண்ணீட்டீங்களா? பெரிய ஷாக் காத்திருக்கு! விநியோகம் தாமதமாகும்னு ஆப்பிள் சொல்லுது
  9. ஐபோன் 14 வாங்க இதுதான் சரியான நேரம்! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 40,000க்கும் குறைவான விலையில்
  10. நத்திங் ஃபேன்ஸ் ரெடியா? புது இயர் 3-ல ‘டாப் பட்டன்’ இருக்காம்! அது எதுக்குன்னு தெரியுமா
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »