2GB டேட்டாவுடன் புதிய பி.எஸ்.என்.எல் திட்டங்கள்!

2GB டேட்டாவுடன் புதிய பி.எஸ்.என்.எல் திட்டங்கள்!

இந்த இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • இரண்டு திட்டங்களும் அளவற்ற தொலைபேசி அழைப்புகளை கொண்டுள்ளது
  • தினமும் 100 மெசேஜ்கள் இலவசம்
  • 2.2GB கூடுதல் டேட்டாவையும் வழங்கவுள்ளது
விளம்பரம்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது 186 ரூபாய் மற்றும் 187 ரூபாய் கொண்ட இரண்டு திட்டங்களை மேம்படுத்தியுள்ளது. இந்த புதிய மேம்பாட்டின்படி, நாளுன்றிற்கு 1GB அளவிலான டேட்டாவை கொண்ட இந்த இரண்டு திட்டங்களும், தற்போது நாளுன்றிற்கு 2GB டேட்டாவை கொண்டு அறிமுகமாகியுள்ளது. டேட்டாவுடன் அளவற்ற தொலைபேசி அழைப்புகளையும் தினமும் 100 மெசேஜ்களையும் இலவசமாக இந்த திட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. முன்னதாக, சமீபத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சில திட்டங்களுக்கு கூடுதல் டேட்டாவை அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி 'சூப்பர் ஸ்டார் 300' என்ற ப்ராட்பேண்ட் சேவையையும அறிமுகப்படுத்திருந்தது.

பி.எஸ்.என்.எல் ஆந்திர பிரதேச தளத்தில் இந்த 186 ரூபாய் திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அந்த தளத்தின்படி, இந்த திட்டம் நாளுன்றிற்கு 2GB டேட்டாவை வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி, அளவற்ற தொலைபேசி அழைப்புகளும் தினமும் 100 மெசேஜ்களும் இந்த திட்டத்தில் இலவசம். இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இந்த 2GB டேட்டா முடிவடைந்தவுடன், வாடிக்கையாளர்கள்  40 Kbps வேகத்தில் அளவற்ற இன்டர்நேட் சேவையை பெறுவார்கள் என கூறியுள்ளது. இந்த திட்டம் டெல்லி மற்றும் மும்பை ஆகிய வட்டாரங்களிலும் அறிமுகமாகியுள்ளது. 

இதே போல அம்சங்களை கொண்ட 187 ரூபாய் திட்டம் பி.எஸ்.என்.எல்  கர்நாடகா தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டமும் நாளுன்றிற்கு 2GB டேட்டா, அளவற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் தினமும் 100 மெசேஜ்கள் இலவசமாக அளிக்கவுள்ளது.

மேலும், அக்டோபர் 1 வரை இந்த திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால், 2.2GB கூடுதல் டேட்டாவையும் அளிக்கவுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. AI லேப்டாப் தேடுறீங்களா? Acer Swift Neo - சிறப்பம்சங்கள், விலை, எங்க கிடைக்கும்னு முழு விவரம்!
  2. iQOO Neo 10: Snapdragon 8s Gen 4 & 7000mAh பேட்டரியுடன் இந்தியாவில் வெளியானது
  3. மடக்கும் போன் பிரியர்களுக்கு குட் நியூஸ்! Motorola Razr 60 அடுத்த வாரமே இந்தியாவில்
  4. Vi-ன் அதிரடி: 'Nonstop Hero' திட்டம் டேட்டாவுக்கு இனி லிமிட் இல்லை
  5. Sony Bravia 2 II Series டிவி Google TV OS வசதியுடன் இந்தியாவில் அறிமுகமானது
  6. Alcatel V3 Pro 5G, V3 Classic 5G இந்திய செல்போன் சந்தையில் ஒரு புதிய அலை
  7. Google I/O 2025 விழா: Gemini 2.5 AI மற்றும் Deep Think Mode பல அம்சங்கள் அறிமுகம்
  8. Apple WWDC 2025 விழா ஜூன் 9ல் தொடங்கி அமர்க்களமாக ஆரம்பமாகிறது
  9. Vivo S30, S30 Pro Mini செல்போன்களின் வெளியீடு தேதி உறுதி செய்யப்பட்டது
  10. Realme GT 7T செல்போன் MediaTek Dimensity 8400 Max SoC சிப்செட் உடன் வருகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »