பிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்!

புதிய சலுகை குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க பிஎஸ்என்எல் ஒடிசா பிரிவுக்கு எஸ்எம்எஸ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல்-ன் ரூ.1,599 மற்றும் ரூ.899 ரீசார்ஜ் ப்ளான்கள் அறிமுகம்!

புதிய ப்ரீபெய்ட் ப்ளான் வவுச்சர்கள் மூலம், பிஎஸ்என்எல் 2 ஜிபி அதிவேக தினசரி டேட்டாவை 425 நாட்கள் வரை வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • இந்த சிறப்பு ப்ளான் வவுச்சர் ஒடிசா வட்டத்தில் கிடைக்கிறது
  • இந்த சலுகைகள் மே 31 வரை மட்டுமே கிடைக்கும்
  • இந்த ப்ளான் குறித்து பயனர்களுக்கு செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
விளம்பரம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது சிறப்பு விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக ரூ.1,599 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் ப்ளான் வவுச்சரை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சலுகை ஒடிசா வட்டத்தில் மட்டுமே கிடைக்கும்.

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனம், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டா, ரூ.1,500 பேச்சு நேரம் மற்றும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் அன்லிமிடெட் உள்வரும் அழைப்புகள் போன்றவற்றை ரூ.1,599 ப்ளான் வவுச்சரில் வழங்குகிறது. இது தவிர, பிஎஸ்என்எல்லின் இந்த ப்ளானின் வேலிடிட்டி 425 நாட்கள் ஆகும். 

ஒன்லிடெக் அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் ஒடிசா பிரிவு, எஸ்எம்எஸ் செய்திகள் மூலம் ரூ.1,599 மற்றும் ரூ .899 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. எஸ்எம்எஸ் ஸ்கிரீன் ஷாட்டின் படம் வெளிவந்துள்ளது. இதில் இந்த ப்ளான் தொடர்பான பிற தகவல்கள் பெறப்பட்டன. இதனுடன், இந்த சிறப்பு சலுகை மே 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் தெரிந்தது.
  

பி.எஸ்.என்.எல் ரூ.1599 ப்ளான் வவுச்சர் பலன்கள்:

ரூ.1,599 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ப்ளான் வவுச்சர், அன்லிமிடெட் உள்வரும் அழைப்புகள், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் ரூ.1,500 பேச்சு நேரம் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. இந்த ப்ளான் வவுச்சரில், பிஎஸ்என்எல் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 20 பைசா ஆகியவை அடங்கும். இந்த ப்ளானின் வேலிடிட்டி 425 நாட்கள் ஆகும்.

 
பி.எஸ்.என்.எல் ரூ.899 ப்ளான் வவுச்சர் பலன்கள்:

பிஎஸ்என்எல்லின் ரூ.899 ப்ளான் வவுச்சருக்கு, ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டா, பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் அன்லிமிடெட் உள்வரும் அழைப்புகள், பிற நெட்வொர்க்குகளில் அழைப்புகளுக்கு 20 பைசா ஆகியவை கிடைக்கும். இருப்பினும், இந்த ப்ளானில் பேச்சு நேர மதிப்பு ரூ.100 ஆகவும், அதன் வேலிடிட்டி 365 நாட்களாகவும் இருக்கும்.

ஆன்லைனில் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களில், ரூ.1,599 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர்கள் மே 31 வரை மட்டுமே கிடைக்கும். இதன் பொருள் வாடிக்கையாளர்கள் இந்த மாத வவுச்சரை இந்த மாதத்திற்குப் பிறகு வாங்க முடியாது. இந்த செய்தி பிஎஸ்என்எல் ஒடிசா நெட்வொர்க்கிற்கு மட்டுமே அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


Which is the bestselling Vivo smartphone in India? Why has Vivo not been making premium phones? We interviewed Vivo's director of brand strategy Nipun Marya to find out, and to talk about the company's strategy in India going forward. We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்
  2. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  3. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  4. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  5. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
  6. பட்ஜெட் விலையில ஒரு தரமான சம்பவம்! Lava Yuva Star 3 லான்ச் ஆகிடுச்சு! 5000mAh பேட்டரியோட ஒரு 'ஸ்டார்' போன்
  7. மியூசிக் லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! Sony WF-1000XM6 லான்ச் ஆகிடுச்சு! நாய்ஸ் கேன்சலேஷன்ல இதுதான் இப்போ ராஜா
  8. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  9. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  10. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »