Photo Credit: OnePlus
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus Pad 2 பற்றி தான்.
OnePlus Pad 2 இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Qualcomm's Snapdragon 8 Gen 3 SoC சிப்செட், 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9,510mAh பேட்டரி மற்றும் 12.1-இன்ச் 3K LCD திரையுடன் வருகிறது. இது நிம்பஸ் கிரே வண்ணத்தில் வழங்கப்படுகிறது. 8 ஜிபி ரேம்+ 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி விருப்பங்களில் கிடைக்கிறது. டேப்லெட்டை OnePlus Stylo 2 ஸ்டைலஸ் மற்றும் OnePlus Smart Keyboard உடன் இணைக்க முடியும். அவை தனியாக விற்கப்படுகிறது. இப்போது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் OnePlus Pad 2 தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் 2 விலை 8GB ரேம் + 128GB மெமரி மாடல் 39,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 42,999 என்கிற விலையில் கிடைக்கிறது. தள்ளுபடியின் போது வாங்குபவர்கள் OnePlus Pad 2 ரூ. 37,999 மற்றும் 40,999 என்கிற சலுகை விலையில் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் வழியாக இதனை பெறலாம்.
சலுகை காலத்தில் பயனர்கள் பெறக்கூடிய கூடுதல் நன்மைகள் உள்ளன. ஐசிஐசிஐ, ஆர்பிஎல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் மேலும் 3,000 தள்ளுபடி கிடைக்கும். அவர்கள் ஒன்பது மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI விருப்பங்களைப் பெறலாம். ரூ. 5,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும்.
OnePlus Pad 2 ஆனது 12.1-இன்ச் 3K LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 144Hz புதுப்பிப்பு வீதம், 303ppi பிக்சல் அடர்த்தி, 900nits உச்ச பிரகாசம் கொண்டுள்ளது. டால்பி விஷன் சப்போர்ட் இருக்கிறது. Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் 12GB வரை LPDDR5X ரேம் மற்றும் 256GB வரை UFS3.1 மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 உடன் வருகிறது.
13 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமராவை கொண்டுள்ளது. இது புளூடூத் 5.4, வைஃபை 7, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யுஎஸ்பி டைப்-சி இணைப்புகளை சப்போர்ட் செய்கிறது. 67W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 9,510mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஹை-ரெஸ் சான்றளிக்கப்பட்ட ஆறு-ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது. 584 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்