OnePlus செம்மையா கொண்டு வந்து இறக்கப்போகுது

OnePlus செம்மையா கொண்டு வந்து இறக்கப்போகுது

Photo Credit: Android Headlines

ஹைலைட்ஸ்
  • இத்தாலியின் மிலனில் நடைபெறும் விழாவில் OnePlus தயாரிப்புகள் வெளியாகிறது
  • ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் டிசைனை மட்டும் சற்று யூகிக்க முடிகிறது.
  • OnePlus Pad 2 இல் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்
விளம்பரம்

புதிய ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ் என நீங்கள் எந்தவொரு புதிய டிவைஸ் வாங்க திட்டமிட்டு இருந்தாலும் அதை ஜூலை 16 ஆம் தேதி வரையிலாக தள்ளிப்போடவும். ஏனென்றால் ஒன்பிளஸ் நிறுவனமானது ஜூலை 16 ஆம் தேதியன்று அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது.

Some say it's impossible in the 5G era to make a smartphone with the stength, sophistication and enduring quality of metal. We say Never Settle என அதனுடைய விழா அழைப்பிதழ் மெட்டல் பிளேட்டில் குறிப்பித்துள்ளது. OnePlus Nord 4 5G, OnePlus Buds 3 Pro மற்றும் OnePlus Watch 2R ஆகியவற்றை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus Nord 4 ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus Ace 3Vன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

OnePlus Nord 4 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை Realme GT 6T ஸ்மார்ட்போனில் காணப்படும் Snapdragon 7+ Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.74 இன்ச் 1.5கே கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 

கேமராக்களை பொறுத்தவரை இது 50எம்பி SonyIMX 882 ப்ரைமரி சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் ஷூட்டரை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 3 மாடலில் நாம் பார்த்த 5000mAhலிருந்து இது 5,500mAh ஆக அப்கிரேட் செய்யப்படலாம் என தெரிகிறது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus Watch 2R, OnePlus Pad 2, OnePlus
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »