நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Infinix XPad டேப்லெட் பற்றி தான்.
Infinix நிறுவனம் தனது முதல் டேப்லெட் மாடலான Infinix Xpad செப்டம்பர் 13ல் இந்தியாவில் அறிமுகமாகிறது. தனித்துவமான வடிவமைப்பு, மீடியாடெக் சிப்செட், பெரிய டிஸ்பிளே. 256ஜிபி மெமரி, AI அம்சம் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. 11 அங்குல திரை மற்றும் மூன்று வண்ண விருப்பங்களில் வெளியாகும்.
Infinix அதிகாரப்பூர்வ வலைத்தளம் புதிய Infinix Xpad மாடலின் விலை மற்றும் விவரங்களைக் குறிப்பிடவில்லை. ஆனால் Infinix நைஜீரியா தகவல்படி, 4ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தோராயமாக ரூ. 13,500 விலையில் ஆரம்பம் ஆகும். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 15,000 விலையில் விற்பனைக்கு வரலாம். இது கருப்பு, நீலம் மற்றும் தங்க நிறங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Infinix Xpad Android 14 மூலம் இயங்குகிறது. இரண்டு வருட சாப்ட்வேர் அப்டேட் பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 11-இன்ச் முழு-எச்டி (1,200x1,920 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மீடியாடெக் ஹீலியோ ஜி99 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் ChatGPT உடன் AI ஆதரவு கொண்ட ஃபோலாக்ஸ் என்ற வசதியை கொண்டுள்ளது. இதனால் குரல் மூலம் கட்டுப்படுத்தலாம். ஸ்டீரியோ ஒலியுடன் கூடிய குவாட்-ஸ்பீக்கர் யூனிட் இருக்கிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த டேப்லெட். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரையில் 8 எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் உள்ளது.
7000mAh பேட்டரி இருப்பதால் இந்த டேப்லெட் மாடலை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இதன் பேட்டரி சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்