8-மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் ஹவாய் மேட்பேட் அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 ஏப்ரல் 2020 13:33 IST
ஹைலைட்ஸ்
  • ஹவாய் மேட்பேட் 7,250 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது
  • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, ஆட்டோ ஃபோகஸ் ஆதரவுடன் வருகிறது
  • ஹவாய் மேட்பேட் புரோ 5 ஜி, 2019 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹவாய் மேட்பேட் இரண்டு கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது

ஹவாய் மேட்பேட் டேப்லெட் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த டேப்லெட் இரண்டு கலர் ஆப்ஷன்கள் மற்றும் இரண்டு ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. டேப்லெட்டின் விலை மற்றும் விவரங்களை இங்கே படித்து தெரிந்துகொள்ளுங்கள். 


ஹவாய் மேட்பேட் விலை:

Huawei MatePad-ன் வைஃபை வேரியண்ட் மாதிரி எண் BAH3-W09 உடன் வருகிறது. 
4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 1,899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,420), 
6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை சிஎன்ஒய் 2,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,640) ஆகும்.

Huwaei மேட்பேட்டின் LTE + Wi-Fi வேரியண்ட் மாடல் எண் BAH3-AL00 உடன் வருகிறது. 
இதன் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 2,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,870).

புதிய டேப்லெட் ஃப்ரிட்டிலரி வைட் மற்றும் நைட் ஆஷ் கலர் ஆப்ஷன்களில் சீனாவில் கிடைக்கிறது. 


ஹவாய் மேட்பேட் விவரங்கள்:

இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 10 உடன் EMUI 10.1-ல் இயக்குகிறது. இது 2,560x1,600 பிக்சல்கள் தெளிவுதிறன் கொண்ட 10.4 அங்குல ஐபிஎஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. திரையில் மெல்லிய பெசல்கள் மற்றும் செல்ஃபி கேமராவுக்கு இடமளிக்க ஒரு ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு உள்ளது. இந்த டேப்லெட் ஹவாய் கிரின் 810 SoC-யால் இயக்கப்படுகிறது. இதில் 6 ஜிபி ரேம் உள்ளது.

டேப்லெட்டின் முன் மற்றும் பின் பேனல்களில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் ஆட்டோஃபோகஸ் மற்றும் ஃபிளாஷ் உடன் வருகிறது. மேலும், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதனை, பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். ஹவாய் மேட்பேட்டில் 7,250 எம்ஏஎச் பேட்டரியும் உள்ளது. இது 245.2x154.96x7.35 மிமீ அளவு மற்றும் 450 கிராம் எடை கொண்டதாகும்.

 
KEY SPECS
Display 10.40-inch
Front Camera 8-megapixel
Resolution 2560x1600 pixels
RAM 4GB
OS Android 10
Storage 64GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 7250mAh
 
NEWS
KEY SPECS
Display 10.40-inch
Front Camera 8-megapixel
Resolution 2560x1600 pixels
RAM 4GB
OS Android 10
Storage 64GB
Rear Camera 8-megapixel
Battery Capacity 7250mAh
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Huawei, Huawei MatePad, Huawei MatePad price, Huawei MatePad specifications
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing Phone 3a Community Edition: டிசம்பர் 9 மாலை 6:30 மணிக்கு வெளியீடு!
  2. iPhone 17e-ல Dynamic Island கன்ஃபார்ம்! பெசல்ஸ் இன்னும் ஸ்லிம் ஆகுது! ₹57,000 ரேஞ்சில் ஆப்பிள் ட்ரீட்!
  3. சஞ்சார் சாத்தி செயலி: கட்டாய நிறுவலை அரசு திரும்பப் பெற்றது!
  4. புது 5G போன் லான்ச்! Redmi 15C 5G: 6.9" டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 50MP கேமரா
  5. புது Poco 5G போன்! ₹15,000-க்கும் குறைவா! C85 5G: 6000mAh பேட்டரி, 33W சார்ஜிங்! டிசம்பர் 9-ல் Flipkart-ல் வாங்கலாம்
  6. Triple Fold போன்! Samsung Galaxy Z TriFold-ன் விலை ₹2.20 லட்சம்! நீங்க வாங்குவீங்களா?
  7. iPhone 16 விலை ₹62,990: Croma-வின் வங்கி தள்ளுபடி சலுகை
  8. Apple-க்கும் மோடி அரசுக்கும் புது சண்டை! iPhone-ல் இனி Sanchar Saathi ஆப் வருமா?
  9. Galaxy Z Fold 8 வருது! கூடவே Apple-ஐ ஜெயிக்க ஒரு 'Wider Fold' மாடல்! Samsung-இன் மாஸ் ப்ளான்
  10. உங்ககிட்ட Original iPhone SE இருக்கா? இனி Apple Store-ல சர்வீஸ் கிடைக்குறது கஷ்டம்! முழு விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.