Huawei தனது Nova 14 சீரிஸின் புதிய மாடலான Nova 14 Vitality Edition-ஐ சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: Huawei
Huawei Nova 14 Vitality Edition, HarmonyOS 5.1 இல் இயங்குகிறது.
Huawei நிறுவனம் தனது Nova சீரிஸில் ஒரு புதிய மாடலை சீனாவில் லான்ச் பண்ணியிருக்காங்க. அதுதான் Huawei Nova 14 Vitality Edition. இந்த போன்ல என்னென்ன இருக்குன்னு பார்த்தா, மிடில்-ரேஞ்ச் செக்மென்ட்ல (Mid-Range Segment) இதை ஒரு வலுவான போட்டியாளரா கொண்டு வந்திருக்காங்கன்னு புரியுது. பொதுவா, புது போன் வந்தா மக்கள் முதல்ல பாக்குறது பேட்டரி மற்றும் கேமராவைப் பத்திதான். அந்த ரெண்டு விஷயத்துலயும் Huawei இம்முறை யாருக்கும் சளைச்சதில்லைன்னு நிரூபிச்சிருக்காங்க.இந்த போனின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டே அதோட பேட்டரி தான். Nova 14 Vitality Edition-ல ஒரு பெரிய 5,500mAh பேட்டரி இருக்கு. அதுமட்டுமில்லாம, இதை ரொம்ப வேகமா சார்ஜ் செய்ய, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொடுத்திருக்காங்க. சார்ஜ் போட அதிக நேரம் தேவை இல்லைங்கிறது ஒரு நல்ல விஷயம்.
இப்போ வர்ற போன்களிலேயே சில கம்பெனிகள் மட்டும்தான் பிரண்ட் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அந்த வரிசையில், Huawei தனது Nova 14 Vitality Edition-ல 50-மெகாபிக்ஸல் (MP) செல்ஃபி கேமராவை கொடுத்திருக்காங்க. இது செல்ஃபி போட்டோஸ் மற்றும் வீடியோ கால்கள்ல அட்டகாசமான தரத்தை கொடுக்கும்.
பின்புறத்துல, ஒரு டூயல் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) இருக்கு:
● 50-மெகாபிக்ஸல் மெயின் சென்சார் (RYYB)
● 8-மெகாபிக்ஸல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ். இது மேக்ரோ ஷூட்டிங்காகவும் (Macro shooting) பயன்படுது.
டிஸ்ப்ளே: இந்த போன் 6.7-இன்ச் அளவுள்ள பெரிய OLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கு. இது Full-HD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. வீடியோ பாக்குறதுக்கும், கேம் விளையாடுறதுக்கும் இது ரொம்ப ஸ்மூத்தா இருக்கும்.
பாதுகாப்பு: இந்த போன் IP65 ரேட்டிங்கைப் பெற்றிருக்கு. அதாவது, லேசான தூசு மற்றும் தண்ணீர் துளிகளால் (Water Splash) பாதிக்காது. இதுக்கு சைட்-மவுன்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் இருக்கு.
டிசைன்: போனின் பின்புறம் Star Orbit Ring டிசைனில் வட்ட வடிவில் கேமரா தொகுதி அமைக்கப்பட்டு, பாக்குறதுக்கு ஸ்டைலாக இருக்கு. இந்த போன் வெறும் 7.18mm தடிமன் மற்றும் சுமார் 192 கிராம் எடை கொண்டு ரொம்ப ஸ்லிம்மா இருக்கு.
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: இது Huawei-ன் சொந்தமான HarmonyOS 5.1-ல் இயங்குகிறது.
நினைவகம் (Storage): இது 256GB மற்றும் 512GB ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் வந்திருக்கு.
நிறங்கள்: Feather Sand Black, Frost White, மற்றும் Ice Blue ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்கள் இருக்கு.
சீனாவில், இந்த போனின் ஆரம்ப விலை (256GB மாடலுக்கு) CNY 2,199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது இந்திய மதிப்பில் சுமார் ₹27,000 ஆகும். 512GB மாடல் சுமார் ₹30,000க்கு (CNY 2,499) கிடைக்குது.
இந்த புதிய Huawei Nova 14 Vitality Edition, நல்ல பேட்டரி மற்றும் கேமரா அம்சங்களுடன், நியாயமான விலையில் லான்ச் ஆகியிருப்பது, மிடில்-ரேஞ்ச் செக்மென்ட்ல ஒரு புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்