ஹுவாய் நிறுவனம் தனது புதிய நடுத்தர ரக டேப்லெட்டான MatePad 11.5 (2026) மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது
Photo Credit: Huawei
மேட்பேட் 11.5 (2026) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சீனாவில் அதன் டேப்லெட் போர்ட்ஃபோலியோவை HUAWEI விரிவுபடுத்தியது.
இன்னைக்கு டேப்லெட் மார்க்கெட்ல ஒரு முக்கியமான அப்டேட் வந்திருக்கு. ஹுவாய் (HUAWEI) நிறுவனம் தனது மிகவும் பிரபலமான மேட்பேட் சீரிஸில் MatePad 11.5 (2026) மாடலை அதிகாரப்பூர்வமா அறிமுகம் செஞ்சிருக்காங்க. இதுல இருக்குற ஒவ்வொரு ஃபீச்சரும் "வேல்யூ ஃபார் மணி" அப்படின்னு சொல்ல வைக்கிற அளவுக்கு இருக்கு.
முதல்ல இதோட டிஸ்ப்ளேல இருந்து ஆரம்பிப்போம். 11.5-இன்ச் கொண்ட இந்தத் திரையில 2.5K (2456 × 1600) ரெசல்யூஷன் இருக்கு. இதுல இருக்குற 120Hz அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் ஸ்க்ரோல் பண்ணும்போது செம ஸ்மூத்தா இருக்கும். குறிப்பா இதுல 'சாஃப்ட் லைட்' (Soft Light) எடிஷன்னு ஒன்னு கொண்டு வந்திருக்காங்க. இதுல நேனோ-எட்ச்சிங் டெக்னாலஜி இருக்குறதால, கண்ணுக்கு எந்த பாதிப்பும் இல்லாம, பேப்பர்ல படிக்கிற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். 600 நிட்ஸ் பிரைட்னஸ் இருக்குறதால வெளிச்சமான இடத்துலயும் நல்லாவே தெரியும்.
இதோட இன்ஜின் அப்படின்னு பார்த்தா, இதுல ஹுவாயின் சொந்த Kirin T82B அல்லது Kirin T82 சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கு. இது 8GB மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ்ல வருது. இந்த டேப்லெட்ல இருக்குற 3D ஹீட் டிசிபேஷன் மேட்ரிக்ஸ் (3D Heat Dissipation) கேம் விளையாடும்போதோ இல்ல அதிக நேரம் வீடியோ பார்க்கும்போதோ டேப்லெட் சூடாகாம பாத்துக்கும்.
பேட்டரி தான் இதோட மிகப்பெரிய பலம். சாதாரணமாக டேப்லெட்கள்ல 7000 அல்லது 8000mAh பேட்டரி தான் இருக்கும். ஆனா இதுல 10,100mAh மெகா பேட்டரியை ஹுவாய் வச்சிருக்காங்க. ஒரு தடவை ஃபுல் சார்ஜ் பண்ணா 14 மணிநேரம் வரைக்கும் தொடர்ந்து வீடியோ பார்க்கலாம்னு சொல்றாங்க. கூடவே 40W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு.
ஆடியோவுக்காக இதுல நாலு ஸ்பீக்கர்ஸ் (Quad Speakers) இருக்கு, இது ஹுவாய் ஹிஸ்டன் 9.0 (HUAWEI Histen) தொழில்நுட்பத்தோட வருது. கேமராவை பொறுத்தவரை பின்னாடி 13MP மற்றும் முன்னாடி 8MP கேமரா இருக்கு. இதுல இருக்குற HarmonyOS 5.1 மூலமா மல்டி-டாஸ்கிங் பண்றது ரொம்ப ஈஸி.
விலை விவரம்: இதோட ஆரம்ப விலை சுமார் ₹22,900 (1,799 Yuan) லிருந்து ஆரம்பிக்குது. ப்ரீமியம் சாஃப்ட் லைட் மாடல் ₹26,700-லிருந்து கிடைக்குது. டிசம்பர் 25 முதல் இது விற்பனைக்கு வருது. பட்ஜெட்ல ஒரு நல்ல டிஸ்ப்ளே மற்றும் நீண்ட நேர பேட்டரி இருக்குற டேப்லெட் வேணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இதை ஒரு சாய்ஸா வச்சுக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 15 Series India Launch Date, Price Range Surface Online; Tipster Leaks Global Variant Price, Features
Clair Obscur: Expedition 33's Game of the Year Win at Indie Game Awards Retracted Over Gen AI Use