சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக், தனது புதிய அப்டேட் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் ஃபேஸ்புக், தனது புதிய அப்டேட் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட்டுக்கு `லிப் சின்க் லைவ்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஃபேஸ்புக் லைவ் போடும் போது, பின்னணியில் தங்கள் விருப்பத்துக்குத் தேவையான பாடலை லிஸ்ட்டில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர், அந்தப் பாட்டின் வரிகளுக்கு ஏற்ப வாயசைத்துக் கலக்கலாம். இந்தப் புதிய வசதி, குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தற்போதைக்கு வெளியே விட்டு சோதனை நடத்த உள்ளதாம் ஃபேஸ்புக் நிறுவனம். அதனை அடுத்து, சீக்கிரமே அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட உள்ளதாம்.
இந்த புதிய வசதி குறித்து ஃபேஸ்புக் நிறுவனம், `உங்கள் மனதிற்கு மிக நெருக்கமான பாடல்களை `லிப் சின்க் லைவ்' வசதி மூலம் பாடி நண்பர்கள் மத்தியில் அசத்துங்கள். பாட்டுக்கு ஏற்றாற் போல பேக்-க்ரௌண்டு மற்றும் மாஸ்க் போன்றவற்றை சேர்க்கும் வசதியும் உள்ளது' என்று தெரிவித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Moto G57 Power India Launch Date Announced; Will Debut With 7,000mAh Battery
Elon Musk’s xAI Releases Grok 4.1 AI Model, Rolled Out to All Users