300 மில்லியன் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் இருக்கும் ஒரு நாட்டில் இதுபோன்ற செயல்பாட்டை ஃபேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேர்தலை முன்னிட்டு முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சுமார் 687 ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் அக்கவுண்ட்களை முடக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திடீர் நடவடிக்கை சில பக்கங்களின் 'ஒழுங்கற்ற நடத்தையே' காரணம் என ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 மில்லியன் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் இருக்கும் ஒரு நாட்டில் இயங்கி வரும் முக்கிய எதிர்கட்சிக்கு எதிராக இதுபோன்ற செயல்பாட்டை ஃபேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஃபேஸ்புக் சார்பில் நடந்த ஒரு சோதனையில் பல போலி ஃபேஸ்புக் கணக்குகள் இருப்பதாகவும், இவைகள் ஓன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எதிராக பல செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த கணக்குகளை வைத்திருப்போரின் விபரங்கள் இன்னும் கிடைக்காத நிலையில் இவைகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியின் ஐடி அணியுடன் தொடர்பு இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை தேர்தல் நடைபெறும் நிலையில் மத்தியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் கடும் போட்டி நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஃபேஸ்புக் நிறுவனம் இது மட்டுமின்றி பாகிஸ்தானில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 103 பக்கங்களையும் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut