Photo Credit: Mark Ralston/ AFP
அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராபர்ட் டவ்னி ஜூனியர், மீண்டும் உலகை காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது மார்வெல் காமிக் படங்களில் இல்லாமல், இம்முறை நிஜமாகவே உலகை காக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இதற்காக 'பூட்ப்ரிண்ட் கூட்டணி' (Footprint Coalition) என்ற பெயரில் ஒரு துவக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு, ரொபோடிக்ஸ், நானோ தொழில்நுட்பம் என அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி உலகத்தை சுத்தம் செய்ய துவங்கப்பட்டது தான் இந்த 'பூட்ப்ரிண்ட் கூட்டணி' துவக்கம்.
அமேசான் நிறுவனம் முதல் முறையாக "Re:Mars" என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு, ரொபோடிக்ஸ், வின்வெளி ஆகியவற்றை மையமாக வைத்து நடத்தப்பட்ட மாநாட்டில் தான், அயர்ன் மேன் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் இந்த துவக்கம் 2020 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவித்தார்.
கடந்த 11 வருடங்கள், மக்களுக்கு டோனி ஸ்டார்க் என்கிற அயர்ன் மேனாக அறிமுகமாகிய ரபர்ட் டவ்னி ஜூனியர், இந்த செயற்கை நுண்ணறிவு, புவியின் தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்ய உதவும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
"இந்த நானோ தொழில்நுட்பம் மற்றும் ரொபோடிக்ஸ் உதவியுடன் இந்த பூமியை தூய்மைப்படுத்தலாம். முழுமையாக தற்போது இல்லையென்றாலும் இன்னும் 10 வருடங்களில்..." என்று அவர் கூறியுள்ளார்.
மொத்தம் 20 நிமிடங்கள் பேசிய இவர், மார்வல் சினிமா உலகம் பற்றியும், அயர்ன் மேன் உருவான கதை பற்றியும், அதன் பரினாம வளர்ச்சி பற்றியும் பேசியுள்ளார்.
"நான் ஏதாவது செய்தாக வேண்டும், ஏனென்றால் தற்போது நான் வேலையில்லாமல் இருக்கிறேன்" என மார்வல் படங்களின் தொடரில் தன் கதாபாத்திரம் முடிவுக்கு வந்ததை கேளியாக கூறியுள்ளார்.
முன்னதாக, அமேசான் சாதனங்கள் மற்றும் சேவைகளின் துணை நிறுவனரான டேவ் லிம்ப் பேசுகையில்,"நாம் இன்று சந்திக்கு மிகவும் சிக்கலான பிரச்சனைகளுக்கெல்லாம் செயற்கை நுண்ணறிவின் மூலம், மிகவும் எளிதாக தீர்வுகளை காணலாம் என நாங்கள் நம்புகிறோம்" என கூறினார்.
இந்த பூமி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு புறத்தில் உச்சியை தொடும் இந்த வெப்பம், மற்றொரு புறத்தில் அகல பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது. பார்ப்போம், புதிதாக அவதாரம் எடுத்துள்ள இந்த அயர்ன் மேன் மீண்டும் அழிவிலிருந்து இந்த பூமியை காப்பாரா?
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்