Photo Credit: NASA
இந்த ஆண்டின் பகுதி சந்திர கிரகணம், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் நிகழவுள்ளது. இந்தியாவில் நடக்கவுள்ள இந்த சந்திர கிரகணத்தை ஜூலை 17-ல் காணலாம். கவணிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், இந்த சந்திர கிரகணம், சாதாரனமாகவே நம் கண்களுக்கு தென்படும் என்பதுதான். இந்த ஆண்டில் நிகழவுள்ள கடைசி சந்திர கிரகணம் இதுதான். இந்தியா மட்டுமின்றி, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் இந்த சந்திர கிரகணத்தை பரவலாக காணலாம். இந்த சந்திர கிரகணம், நிலவில் மனிதர்கள் முதன்முதலாக கால் வைக்க காரணமாக இருந்த அப்பல்லோ 11-ன் 50வது ஆண்டு நிறைவு நாள் வெளிப்படுகிறது என்பது தனிச்சிறப்பு!
பகுதி சந்திர கிரகணம் 2019: நிகழும் நாள் மற்றும் நேரம்!
ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் இந்த சந்திர கிரகணத்தை பரவலாக காணலாம். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம், ஜூலை 17 அன்று இரவு 12:13 மணிக்கு துவங்கும். அப்போது துவங்கும் சந்திர கிரகணம் அதிகாலை 3 மணிக்கு முழு அளவை எட்டிவிடும். அதாவது பூமியின் நிழல் மொத்தமாக நிலைவை மறைத்துவிடும். பின் காலை 5:47 மணிக்கு சூரியன்- நிலவு கோட்டிலிருந்து பூமி முழுவதுமாக விலகிவிடும். அதாவது, சந்திர கிரகணம் முழுமையடைந்துவிடும்.
இதன்படி, இந்த சந்திர கிரகணம் 2 மணி நேரம், 57 நிமிடம், 56 நொடிகளுக்கு இந்த சந்திர கிரகணம் நீடிக்கவுள்ளது.
பகுதி சந்திர கிரகணம் 2019: சில விவரங்கள்!
உலகின் பல பகுதிகளில் ஜூலை 16 மற்றும் ஜூலை 17 ஆகிய நாட்களில் நிகழவுள்ள இந்த பகுதி சந்திர கிரகணம், இந்த ஆண்டின் முதல் பகுதி சந்திர கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாகவே, இந்த ஆண்டின் ஜனகரி மாதத்தில் ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்திருந்தாலும், அது முழு சந்திர கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுதி சந்திர கிரகணம் என்றால் என்ன?
சூரியன் மற்றும் நிலவின் கோட்டில் பூமி வருவதுதான் சந்திர கிரகணம். அவ்வாறு, நிலவு - சூரியன் கோட்டில் சந்திரன் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழும். அதைத்தான் சந்திர கிரகணம் என அழைப்பார்கள். இதில் பூமியின் நிழல் முழுவதுமாக நிலவை மறைத்துவிட்டால் அது முழு சந்திர கிரகணம். ஒருவேளை, பூமியின் நிழல், சந்திரனின் சில பகுதிகளில் விழவில்லை என்றால், அதனை பகுதி சந்திர கிரகணம் என அழைப்பார்கள்
இந்த சந்திர கிரகணத்தின் சிறப்பு!
முன்பு கூறியதுபோல, நிலவில் மனிதர்கள் முதன்முதலாக கால் வைக்க காரணமாக இருந்த அப்பல்லோ 11-ன் 50வது ஆண்டு நிறைவு நாள் அன்று இந்த சந்திர கிரகணம் வெளிப்படுகிறது. இந்தியாவில் குரு பூர்னிமா கொண்டாடப்படும் நாளில் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. 149 ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாதிரி நிகழ்கிறது என்பது தனிச்சிறப்பு
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்