Photo Credit: Facebook/ Dr. Mylswamy Annadurai
சந்திர மேற்பரப்பில் உள்ள தடைகள் சிக்னல்களைப் பெறுவதிலிருந்து லேண்டரைத் தடுத்திருக்கலாம் என்று சந்திரயான் -1 இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) சனிக்கிழமை அதிகாலையில் சந்திர மேற்பரப்பில் தொடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சந்திரயான்-2 செயற்கைகோளின் மூன்று பகுதிகளில் ஒன்றான விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது.
"சந்திர மேற்பரப்பில் லேண்டரை நாங்கள் கண்டுபிடித்துள்ளதால், இப்போது நாம் அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். லேண்டர் இறங்கிய இடம், லேண்டர் மென்மையான தரையிறக்கத்திற்கு போதுமானதாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில தடைகள் இருக்கலாம், அவை இணைப்பை நிறுவுவதில் இருந்து எங்களைத் தடுத்திருக்கலாம்", என்று அண்ணாதுரை ANI-யிடம் கூறியுள்ளார்.
லேண்டரைக் கண்டறிந்த அதே ஆர்பிட்டருக்கு ஒரு தகவல்தொடர்பு சேனலும் வழங்கப்பட்டுள்ளது, இதனை லேண்டருடன் தகவல்தொடர்புகளை நிறுவுவதற்கான பக்க-இணைப்பாக பயன்படுத்தலாம் என்று கூறினார்.
மேலும் "கடந்த காலங்களில், சந்திரயானின் ஆர்பிட்டர்கள் சிக்னல்களை நிறுவ லேண்டரை நோக்கி சிக்னல்களை ஒளிபரப்பியது, ஆனால் தற்போதைய விஷயத்தில், லேண்டர் அதைப் பெறுகிறாரா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்," என்று சந்திரயான்-1 செயற்கைகோளின் இயக்குனர் கூறினார்.
"ஆர்பிட்டருக்கும் லேண்டருக்கும் இடையில் எப்போதும் இருவழி தொடர்பு உள்ளது, ஆனால் நாம் ஒரு வழியாக தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம்."
எவ்வாறாயினும், தகவல் தொடர்பு 5-10 நிமிடங்களுக்கு மேல் இருக்காது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
"இது ஒரு தந்திரமான சூழ்நிலை, ஆனால் எங்கள் விஞ்ஞானிகள் அதைக் கையாளும் திறன் கொண்டவர்கள்" என்று அவர் கூறினார்.
விக்ரம் லேண்டர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள தரை நிலையத்துடனான தொடர்பை இழந்தபோது, நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ உயரத்தில் இருந்தது.
இன்று முன்னதாக, இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் ANI-யிடம், 'ஏற்கனவே சந்திரனின் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டுள்ள ஆர்பிட்டரால் எடுக்கப்பட்ட வெப்பப் படம் மூலம் லேண்டரின் இருப்பிடத்தை இஸ்ரோ நிறுவனம் கண்டறிந்துள்ளது' என்று கூறினார்.
மேலும், லேண்டருடன் எந்த தகவல்தொடர்புகளும் நிறுவப்படவில்லை என்றும் அடுத்த 14 நாட்களில் அதை நிறுவ இஸ்ரோ நிறுவனம் முயற்சிக்கும் என்றும் சிவன் கூறினார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றி வந்த பிறகு, விண்கலம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சந்திரனுக்கான பயணத்தைத் தொடங்கியது, மேலும் கடைசி சில நிமிடங்கள் இறங்கும் வரை அனைத்து சூழ்ச்சிகளும் முழுமையாகக் கடந்தது.
இந்த சம்பவம் விண்வெளி நிறுவனம் மற்றும் அதன் விஞ்ஞானிகளுக்கு தங்கள் ஆதரவைக் காண்பிப்பதில் இந்தியா முழுவதும் ஒன்றுபட்டது என்பதை காட்டுகிறது. லாண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும் சந்திரன் பணி அதன் நோக்கங்களில் குறைந்தது 90 முதல் 95 சதவிகிதம் வரை நிறைவேற்றியுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்