வரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
வரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்!

Photo Credit: YouTube/ ISRO

Chandrayaan-2 விண்கலம் சந்திரனை 96 கி.மீ தூரத்திலும், 125 கி.மீ தூரத்திலும் உச்சநிலையிலும் சுற்றிக்கொண்டிருக்கும்

ஹைலைட்ஸ்
 • 35 கி.மீ அண்மைநிலை, 101 கி.மீ உச்சநிலை சுற்றுப்பாதையில் Vikram Lander
 • "ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இரண்டும் நல்ல நிலையில் உள்ளது"
 • செப்டம்பர் 7 அதிகாலை 1 - 2 மணி வரை நிலவின் லேண்டர் விக்ரம் இயக்கப்படும்

Chandrayaan 2: சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் இரண்டாவது சுற்றுப்பாதை சூழ்ச்சி புதன்கிழமை அதிகாலை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, சந்திர மேற்பரப்பில் ஒரு வரலாற்று மென்மையான தரையிறக்கத்தை அடைவதற்கு வழிவகுத்தது. ஒன்பது வினாடிகள் டி-சுற்றுப்பாதை அல்லது ரெட்ரோ-சுற்றுப்பாதை சூழ்ச்சி, அதிகாலை 3:42 மணிக்கு உள்-உந்துவிசை முறையைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டது என்று இந்திய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த சூழ்ச்சியின் மூலம், விக்ரம் லேண்டர் (Vikram Lander) சந்திரனின் மேற்பரப்பை நோக்கி செல்ல தேவையான சுற்றுப்பாதை அடையப்படுகிறது" என்று இஸ்ரோ ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

லேண்டர் 'விக்ரம்' சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, செவ்வாயன்று, விண்கலத்திற்கான முதல் டி-சுற்றுப்பாதை சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

சந்திரயான் -2 விண்கலம் சந்திரனை 96 கி.மீ தூரத்திலும், 125 கி.மீ தூரத்திலும் உச்சநிலையிலும் சுற்றிக்கொண்டு இருக்கும்போது, ​​விக்ரம் லேண்டர் 35 கி.மீ அண்மைநிலை மற்றும் 101 கி.மீ உச்சநிலை சுற்றுப்பாதையில் உள்ளது.

"ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இரண்டும் நல்ல நிலையில் உள்ளது" என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நிலவின் லேண்டர் விக்ரம் இயக்கப்பட வேண்டும் என்று இந்த விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.

இஸ்ரோ இதற்கு முன் இதை செய்யாததால் சந்திரனில்  மென்மையான தரையிறக்கம் ஒரு "திகிலூட்டும்" தருணமாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார். அதேசமயம் சந்திரயான் -1 பணியின் போது சந்திர சுற்றுப்பாதை செருகல் (எல்ஓஐ) சூழ்ச்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. .

தரையிறங்கியதைத் தொடர்ந்து, 'பிரக்யன்' என்ற ரோவர் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 5: 30-6: 30 மணிக்கு இடையில் 'விக்ரம்' லேண்டரிலிருந்து வெளியேறி, சந்திர மேற்பரப்பில் ஒரு சந்திர நாள் காலத்திற்கு சோதனைகளை மேற்கொள்ளும், இது 14 பூமி நாட்கள் சமம்.

லேண்டரின் பணி வாழ்க்கையும் ஒரு சந்திர நாள், ஆர்பிட்டார் ஒரு வருடத்திற்கு தனது பணியைத் தொடரும்.

இந்தியாவின் ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் ஏவுதல் வாகனம், GSLV MkIII-M1 ராக்கெட் 3,840 கிலோ எடையுள்ள சந்திரயான் -2 விண்கலத்தை ஜூலை 22 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவியது.

இந்தியாவின் இரண்டாவது சந்திர பயணம், சந்திரனின் முற்றிலும் ஆராயப்படாத ஒரு பகுதியான் தென் துருவப் பகுதியை ஆராயவுள்ளது.

இந்த தரையிறக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், சந்திரனில் மென்மையான தரையிறக்கத்தை மேற்கொண்ட ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது நாடாக மாற்றும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. ரெட்மி 8 மொபைல் விலை மீண்டும் உயர்ந்தது! செல்போன் பிரியர்கள் அதிர்ச்சி
 2. 128 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வீவோ Y30 மொபைல் வெளியீடு!
 3. zoom-க்கு மாற்றாக இலவச வீடியோ கான்பரன்சிங் App-ஐ வெளியிட்ட ரிலையன்ஸ் ஜியோ!
 4. அட்டகாசமான வசதிகளுடன் எம்ஐ லக்ஸ் 65-இன்ச் 4k எல்இடி டிவி அறிமுகம்! விலை தெரியுமா?
 5. டிக் டாக் மாற்றான இந்திய செயலி ’சிங்காரி’: 1 கோடிக்கும் மேல் பதிவிறக்கம்!
 6. ரூ. 2,399 ரீசார்ஜ் - 600 நாட்கள் வேலிடிட்டி! BSNL-ன் அட்டகாசமான ஆஃபர்
 7. சாம்சங் ஃப்ளிப் மாடல் மொபைல் விலை ரூ. 7 ஆயிரம் அதிரடியாக குறைப்பு!
 8. விரைவில் விற்பனைக்கு வருகிறது விவோ Y30! விலை தெரியுமா?
 9. ஒன்பிளஸ் 8 ப்ரோ விற்பனை தொடக்கம்; விலை, ஆஃபர் விவரம்!
 10. சாம்சங் கேலக்ஸி ஏ31 விலை அதிரடி குறைப்பு! சிறப்பு சலுகைகள் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com