கடந்த வாரம் எம்ஐ நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த புதிய கேபிள்கள் தற்போது அறிமுகப்படுத்தபட உள்ளன.
இந்தியாவில் ரூபாய் 249-க்கு விற்பனை செய்யப்படும் இந்த எம்ஐ சார்ஜிங் கேபிள்கள்
சியோமியின் எம்ஐ யுஎஸ்பி பிரேய்டேட் கேபிள்கள் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன. சியோமியின் இந்த புதிய கேபிள் டிசையின், 2A வகை சார்ஜ் செய்யும் உதவியால் அதி விரைவாக போன்களை சார்ஜ் செய்ய ஏதுவாக இருக்கும் எனப்படுகிறது.
மிகவும் உறுதியானதாகவும், அதிக நாள் உழைக்கக் கூடியதாகவும் இந்த சார்ஜிங் கேபிள் இருக்கும் என எதிர்பார்கப்படும் நிலையில், எம்ஐ.காம் இணையதளத்தில் வரும் புதன்கிழமை மதியம் 12 மணி முதல் ரூபாய் 249-க்கு இவை விற்பனை செய்யப்படவுள்ளன.
அதிவிரைவு சார்ஜிங் டெக்னாலஜி கொண்டிருக்கும் இந்த கேபிள்கள் சிவப்பு நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கியமாக எம்ஐ மைக்ரோ யுஎஸ்பி பிரேய்டேட் கேபிளில் புதிய கேபிள்கள் வைத்து டைப்-சி வகை சார்ஜரில் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த சார்ஜரின் நீளத்தைப் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால், சீனாவில் இதே போன்ற கேபிள் ஓன்று சுமார் 100 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக சந்தையில் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.
கடந்த வாரம் எம்ஐ நிறுவனத்தின் தொலைக்காட்சி வரிசைகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது இந்த புதிய கேபிள்கள் அறிமுகப்படுத்தபட உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
iQOO 15: Snapdragon 8 Gen 4, 150W சார்ஜிங்! அடுத்த வருஷம் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகுது!
Infinix Hot 60i 5G: ₹10,000-க்குள்ளே 6,000mAh பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Vu Glo QLED TV 2025: 120W சவுண்ட்பார், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் அதிரடி! விலை மற்றும் முழு அம்சங்கள்!
Realme P4 சீரிஸ்: 6,000 nits டிஸ்ப்ளேவுடன் ஒரு புது புரட்சி! ஆகஸ்ட் 20-ல் இந்தியாவில் வெளியீடு