முன்னதாக iOS பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அண்ட்ராய்ட் பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப் ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சம் இறுதியாக கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அம்சம் சமீபத்திய அண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷன் 2.19.221-உடன் கிடைக்கப்பெறுகிறது. இந்த அம்சம் சாதாரனமாக ஏக்டிவேட் செய்யப்பட்டு இருக்காது, இதை பயன்படுத்த வேண்டுமென்றால் செட்டிங்ஸ்குள் சென்று ஏக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். ஃபிங்கர் பிரின்ட் லாக் இயக்கத்திலிருந்தபோது செய்தியைக் காண்பிப்பதா அல்லது மறைக்க விரும்புகிறீர்களா என்பதை அனுமதிக்க புதிய ‘அறிவிப்புகளில் உள்ளடக்கத்தைக் காண்பி' (show content in notifications) என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறிப்பிட்டபடி, ஃபிங்கர் பிரின்ட் லாக் வசதி சமீபத்திய அண்ட்ராய்ட் பீட்டா வெர்சன் 2.19.221-ல் இயக்கப்படுகிறது. இது இயல்பாக செயல்பாட்டில் இருக்காது, இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் பயனர்கள் WhatsApp Settings > Account > Privacy > Fingerprint lock, அதற்குள் சென்று அதை வசதியை ஈக்டிவேட் செய்துகொள்ள வேண்டும். இந்த அம்சத்தை ஸ்மார்ட்போனில் பெற ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்பு, மற்றும் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.
இந்த வசதியை செயல்படுத்துகையில், பயனர்கள் வாட்ஸ்அப்பைத் திறக்க் ஃபிங்கர் பிரின்ட்டை பயன்படுத்த வேண்டும். ‘தானாக அன்லாக்' செய்துகொள்வதற்கான மூன்று விருப்பங்கள் உள்ளன - உடனடியாக, 1 நிமிடத்திற்குப் பிறகு, 30 நிமிடங்களுக்குப் பிறகு. பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வசதிகளிலிருந்து தேர்வு செய்யலாம். 'உடனடியாக' விருப்பத்தைத் தேர்வுசெய்தால், பயனர்கள் ஒவ்வொரு முறையும் செயலியை மூடி திறக்கும்போது ஃபிங்கர் பிரின்ட் அங்கீகாரம் தேவைப்படும்.
IOS பயன்பாட்டில் 15 நிமிட வசதி உள்ளது, ஆனால் அந்த வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இடம்பெறவில்லை. அண்ட்ராய்ட்டில், அறிவிப்புகளில் உள்ளடக்கத்தைக் காண்பி என்று ஒரு புதிய விருப்பம் உள்ளது, எனவே பயனர்கள் ஃபிங்கர் பிரின்ட் லாக் இயக்கப்பட்டிருக்கும்போது செய்தியைக் காண்பிக்க அல்லது மறைக்க விரும்புகிறீர்களா என்பதை தீர்மானிக்க முடியும்.
இந்த விருப்பத்தை நீங்கள் இயக்கவில்லை எனில், பயனர்கள் அறிவிப்புகளிலிருந்து வரும் செய்திகளுக்கு பதிலளிக்கலாம் மற்றும் வாட்ஸ்அப் அழைப்புகளுக்கு பதிலளிக்கலாம். வாட்ஸ்அப் அம்சங்கள் பின்பற்றும் WABetaInfo, நீங்கள் ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்தை இயக்கும் போது, விட்ஜெட் உள்ளடக்கம் இயல்பாக மறைக்கப்படும் என்று கூறுகிறது.
WABetaInfo இந்த அம்சத்தை முதலில் கண்டறிந்து, “ஃபிங்கர் பிரின்ட் லாக் அம்சத்தை இயக்குவது உங்கள் தனியுரிமைக்கு பாதுகாப்பானது' என கூறியுள்ளது. ”
சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் இந்த அம்சத்தை நாம் காணலாம், மேலும் இது விரைவில் நிலையான பயன்பாட்டு பயனர்களுக்கு வெளிவர உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்