சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தனது அடுத்த மாடலான எக்ஸ் 21ஐ முதன்முறையாக இந்தியாவில் வெளியிட உள்ளது. விவோ எக்ஸ் 21 கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பி மற்றும் போனின் பின்பகுதியில் கைரேகை ஸ்கேனர் இருந்தாலும், டிஸ்ப்ளேவின் எந்த பகுதியிலும் கைரேகை வைத்து போனை அன்லாக் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் அம்சம்.
போனின் சிறப்பம்சங்கள்:
2280 க்கு 1080 ரெசொல்யூஷன் கொண்ட 6.28 அளவுள்ள எச்டி ஏஎம்ஓஎல்இடி டிஸ்ப்ளே, 156.2 கிராம் எடை, குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட், ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 12 எம்பி மற்றும் 5 எம்பி கொண்ட பின்புற கேமராக்கள், 12 எம்பி அளவுள்ள செல்பி கேமரா, 1080p அளவில் வீடியோ ரெக்கார்டிங் வசதி, இரட்டை சிம் கார்டு ஸ்லாட், வைபை, புளூடூத், ஜிபிஎஸ், 4ஜி எல்டிஇ, 3200 எம்ஏஎச் அளவு பேட்டரி ஆகியவை உள்ளது. மே 29ம் தேதி முதல் இந்தியாவில் வெளியாகும் இந்த போன் ரூ.37,999க்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்