ஆப்பிள் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய புகைப்பட போட்டிக்காக தனது வாசகர்களுக்கு அந்நிறுவனம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுளது. அதன்படி இப்போட்டியில் ஐ-போன்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை சமர்பிப்போர்க்கு வெற்றிப்பரிசு காத்திருக்கிறது.
மேலும் ஜனவரி 22 ஆம் தேதி தொடங்குகின்ற இந்த போட்டிகள் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தேதிக்குள் புகைப்படங்களை சமர்பிப்பவர்கள் மட்டுமே கண்க்கில் எடுத்துகொள்ளப்படுவர்.
‘ஷாட் ஆன் ஐ-போன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த போட்டியில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை ஓரு குழு சரிபார்த்து அவைகளில் சிறந்த 10 புகைப்படங்களை தேர்வு செய்வர். வெற்றி பெற்ற புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் விளம்பர பலகைகள் மற்றும் ஆப்பிளின் ரிடேயில் கடைகளில் வைக்கப்படும்.
மேலும் இதில் பங்குபெற ஐ-போனில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஆப்பிளின் எடிட்டிங் டூல்சை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் #ShotOniPhone என்ற ஷாட்டாக்குடன் பதிவேற்ற வேண்டும்.
பங்கேற்கும் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்துக்கள்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.