Samsung Galaxy Note 9 மற்றும் Galaxy M10s சாம்சங் தீபாவளி விற்பனையின் போது தள்ளுபடியைப் பெற்றுள்ளன. இது நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்தியாவில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. சாம்சங் பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களில் கேஷ்பேக் மற்றும் ஒப்பந்தங்களையும் வழங்குகிறது. இதேபோல், தீபாவளி விற்பனையின் கீழ் Samsung Galaxy Watch 46mm-ன் சிறப்பு விலை அக்டோபர் 25 வரை நீடிக்கும். விற்பனைக்கு கூடுதலாக, சாம்சங் தனது Galaxy Note 10 மற்றும் Galaxy S10 மாடல்களில் பண்டிகை ஒப்பந்தங்களை ஆன்லைன் ஸ்டோர் மூலம் அறிவித்துள்ளது.
சாம்சங் தீபாவளி விற்பனியின் கீழ், Samsung Galaxy M10s-ன் விலை 8,999 ரூபாயிலிருந்து தள்ளுபடி விலையாக 7,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 128GB கொண்ட Galaxy Note 9 தள்ளுபடி விலையில் ரூ. 42,999-யாக சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் சில்லரை விற்பனையில் ரூ. 51,990 ஆக உள்ளது.
சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் சாம்சங் தீபாவளி விற்பனையின் போது எச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கார்டுகலைப் பயன்படுத்தி 10 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். மேலும், MobiKwik Supercash-ல் 10 சதவிகித்அம் வரை நிறுவனம் ஆஃபர் வழங்குகிறது. மேலும், MakeMyTrip வழியான பயண முன்பதிவுகளுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது. ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாங்கும் போது பழைய சாதனத்தில், கூடுதல் எக்ஸ்சேஞ் மதிப்பும் உள்ளது.
Samsung Galaxy Watch 46mm தள்ளுபடி விலையில் ரூ. 23.990-க்கு சாம்சங் தீபாவளி விற்பனையில் கொண்டுவந்துள்ளது. சாம்சங் பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களில் 50 சதவீதம் வரை சலுகைகளை வழங்குவதாகவும் கூறுகிறது. அதேபோல், AKG, Harman Kardon மற்றும் JBL audio தயாரிப்புகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.
சாம்சங் தீபாவளி விற்பனையுடன், Samsung Galaxy Note 10 மற்றும் Samsung Galaxy S10 series-யிலும் பண்டிகை ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது. Samsung Galaxy S10 மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 5,000 உடனடி கேஷ்பேக்கை பெற முடியும். மேலும், SBI கிரெடிட் கார்டுகள் மூலம் ஐந்து சதவீதம் கேஷ்பேக் (ரூ .5,000 வரை) உள்ளது.
Galaxy S10 மற்றும் Galaxy Note 10 மீதான பண்டிகை ஒப்பந்தங்கள் அக்டோபர் 31 வரை இந்தியா முழுவதும் உள்ள சாம்சங் விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கின்றன. இருப்பினும், Galaxy Watch Active மற்றும் Galaxy Buds ஆகியவை சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் விற்பனை நிலையங்கள் மற்றும் Amazon.in போன்ற ஆன்லைன் ஸ்டோர்ஸ் மூலமும், Flipkart, Paytm, Snapdeal மற்றும் Tata CLiQ ஆகியவற்றிலும் bundled ஆஃபரில் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்