சாம்சங் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் சாலை வரைபடத்தை (roadmap) வெளிப்படுத்தியுள்ளது. மேலும், குறைந்த விலை போன்களில் வரும்போது சில ஆச்சரியங்கள் உள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில், Galaxy S9 மற்றும் Galaxy Note 9 சீரிஸ் ஆகியவற்றுடன், அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் முதல் போனாக Galaxy S10 மற்றும் Galaxy Note 10 சீரிஸ் இருக்கும். ஆனால், Galaxy M20, Galaxy M30 மற்றும் Galaxy A30 ஆகியவை அடுத்த ஆண்டு ஜனவரியில் புதுப்பிக்க சாம்சங் உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் 2019-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏராளமான சாம்சங் தொலைபேசிகள் அப்டேட்டைப் பெறும்.
ஆண்ட்ராய்டு 10 அப்டேட் சாலை வரைபடம் (roadmap) அதிகாரப்பூர்வ சாம்சங் உறுப்பினர்கள் செயலியில் சாம்சங் பகிர்ந்து கொண்டது. ஆண்ட்ராய்டு 10 ரோல்அவுட்டின் முதல் கட்டம் ஜனவரியில் நடத்தப்பட்டு பின்னர் நிறுத்தப்படும். இரண்டாவது கட்டத்தைப் பொறுத்தவரை, இது மார்ச் மாதத்தில் துவங்கி செப்டம்பர் வரை தொடரும். ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறுவதற்கான கடைசி இரண்டு சாதனங்கள் Galaxy Tab A (2018)-ன் 10.5-inch மாடல் மற்றும் Galaxy Tab A 10.1 ஆகிய இரு சாதனங்களும் செப்டம்பர் மாதத்தில் அப்டேட்டைப் பெறவுள்ளது.
அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறவுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான முழு புதுப்பிப்பு அட்டவணை பின்வருமாறு:
Update Timeline | Device |
---|---|
January | Galaxy S9, Galaxy S9+, Galaxy Note 9, Galaxy M20, Galaxy M30, Galaxy A30, Galaxy S10e, Galaxy S10, Galaxy S10+, Galaxy Note 10, Galaxy Note 10+ |
March | Galaxy M40 |
April | Galaxy A6, Galaxy A6+, Galaxy A7 (2018), Galaxy A9 (2018), Galaxy A50, Galaxy A70, Galaxy A50s, Galaxy A70s, Galaxy A80, Galaxy A80, Galaxy Fold, Galaxy M30s, Galaxy Tab S6 |
May | Galaxy A8 Star, Galaxy A10, Galaxy A10s, Galaxy A20, Galaxy A30s, Galaxy M10s, Galaxy A20s, Galaxy A30s, Galaxy M10s |
June | Galaxy On6, Galaxy J6, Galaxy A20s |
July | Galaxy J6+, Galaxy J7, Galaxy On8, Galaxy J8, Galaxy Tab S4, Galaxy Tab S5e |
August | Galaxy Tab A8, Galaxy Tab S5e |
September | Galaxy Tab A (2018) 10.5, Galaxy Tab A 10.1 |
இருப்பினும், சோதனைக் கட்டத்தில் சாலை வரைபடம் மாற்றியமைக்கப்படலாம் (roadmap) என்பதையும், சிக்கலான பிழை ஏற்பட்டால் சாம்சங் ஆண்ட்ராய்டு 10 மேம்படுத்தல் சுழற்சியை நிறுத்தக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில், பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை வெளியீடு காலவரையின்றி நிறுத்தப்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்