இந்தியாவில் இன்று இரண்டாவது முறையாக சாம்சங் கேலக்ஸி எம்30 விற்பனைக்கு வெளியாக உள்ளது. கடந்த வாரம் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் தளங்களில் சேல் நடந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் சேல் துவங்கியுள்ளது.
மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் சூப்பர் அமோலெட் திரையைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மார்கெட்டில் நாளை (13 மார்ச்) வெளியாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ போனுக்கு போட்டியாக வந்துள்ளது.
இன்று சரியாக 12 மணி முதல் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் தளங்களில் துவங்கும் இந்த விற்பனையின் மூலம் குறைந்த அளவு போன்களையே வாங்க முடியும் எனப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்30 விலை (இந்தியா):
சாம்சங் கேலக்ஸி எம்30, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடைய இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.14,990க்கு விற்கப்படுகிறது. அதுபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகொண்ட சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,990க்கு விற்கப்படுகிறது.
மேலும் இந்தத் தயாரிப்புகள் கிரேடியன்ட் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகிறது. இந்த சேலின் மூலம் கட்டணமில்லா தவணைத் திட்டம், போனுக்கான இன்சுரன்ஸ் ரூ.1,119 விலையில் மற்றும் ஜியோவின் டபுள் டேட்டா போன்ற பல ஆஃபர்களுடன் வெளியிடுகிறது சாம்சங்.
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன்களின் அமைப்புகள்:
இரண்டு சிம் கார்டுகளுக்கான இடம், ஆண்ட்ராய்டு 9 பைய் வசதியுடன் வெளியாகமல் 8.1 ஓரியோ மென்பொருளுடன் இந்தத் தயாரிப்பு கடந்த மாதம் வெளியானது. 6.4 இஞ்ச் ஹெச்டி திரை, சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி-யூ திரை மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்30 கொண்டுள்ளது.
வைட்வையின் எல்1 சான்றிதழை இந்த போன் பெற்றுள்ளதால் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் வீடியோக்களை ஹெச்டி தரத்தில் பார்க்க முடியும். மற்ற அமைப்புகளான ஆக்டா கோர் எக்ஸ்னாஸ் 7904 பிராசஸரை கொண்டுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை 13 மெகா பிக்சல் ஆர்ஜிபி சென்சார், 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் அல்ட்ரா வையிட் சென்சார் உள்ளது.
முன்புற கேமராக்களைப் பொறுத்தவரை 16 மெகா பிக்சல் செல்ஃபி சென்சாரும் இதில் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட் போனின் உள்ளிருக்கும் சேமிப்பு வசதியைப் பொறுத்தவரை 64 ஜிபி மற்றும்128 ஜிபி என இரண்டு வகைகள் இடம்பெற்றுள்ளன.
பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 5000mAh உள்ள நிலையில் கூடுதலாக 15W சார்ஜர் மற்றும் டைப் சி போர்ட் உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் பின்புறத்தில் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரும் முன்புறத்தில் ஃபேஸ் அன்லாக் சென்சாரும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்