Samsung Galaxy M30s price 4GB RAM வேரியண்ட் இப்போது ரூ. 12,999-ல் இருந்து தொடங்குகிறது. போனின் 6GB RAM வேரியண்டை ரூ. 14,999-க்கு வாங்கலாம்.
Samsung Galaxy M30s-ன் விலை ரூ. 2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது
Samsung Galaxy M30s இந்தியாவில் விலைக் குறைப்பை பெற்றுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் இப்போது அனைத்து விற்பனை சேனல்கள் வழியாக திருத்தப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் முதல் விலைக் குறைப்பு இதுவாகும்.
Samsung Galaxy M30s price 4GB RAM வேரியண்ட் இப்போது ரூ. 12,999-ல் இருந்து தொடங்குகிறது. இது முன்பு ரூ. 13.999-க்கு விற்பனை செய்யப்பட்டது. போனின் 6GB RAM வேரியண்ட்டை அதன் அசல் விலையான ரூ. 16.999-யில் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 14,999-க்கு வாங்கலாம். இந்த போனின் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டுகளும் Sapphire Blue மற்றும் Opal Black கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் 4GB RAM பதிப்பை Pearl White நிறத்திலும் வாங்கலாம். Amazon மற்றும் Samsung.com வழியாக இந்த போனை ஆர்டர் செய்யலாம்.
டூயல்-சிம் (நானோ) Samsung Galaxy M30s, OneUI உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.4-inch full-HD+ (1,080x2,340 pixels) Infinity-U டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த போன் 6GB RAM மற்றும் 128GB உடன் இணைக்கப்பட்டு Exynos 9611 octa-core processor-ஆல் இயக்கப்படுகிறது
Samsung Galaxy M30s, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் f/2.0 aperture உடன் 48-megapixel முதன்மை ஷூட்டர் , 5-megapixel depth கேமரா மற்றும் 123-degree field of view உடன் 8-megapixel ultra-wide-angle கேமரா ஆகியவை அடங்கும். முன்புறத்தில், 16-megapixel செல்ஃபி கேமரா உள்ளது. கூடுதலாக, இந்த போனின் ஸ்டோரேஜை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cyberpunk 2077 Has Sold 40 Million Copies, CD Projekt Red Confirms
Nokia 235 4G (2026), 215 4G (2026) Launched Alongside Nokia 210 4G, and 200 4G With AI Assistant Button
Samsung Galaxy S27 Ultra Battery Details Leaked; Could Top iPhone 18 Pro Max's Battery Capacity