2-வது முறையாக விற்பனைக்குத் தயாராகும் சாம்சங் 'கேலக்ஸி எம்30'!

6.4 இஞ்ச் ஹெச்டி திரை, சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி-யூ திரை மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்30 கொண்டுள்ளது.

2-வது முறையாக விற்பனைக்குத் தயாராகும் சாம்சங் 'கேலக்ஸி எம்30'!

ரூ.14,990க்கு விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி எம்30!

ஹைலைட்ஸ்
  • இன்று மதியம் 12 மணி முதல் சாம்சங் கேலக்ஸி எம்30 சேல் துவக்கம்!
  • அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் இன்று விற்பனை!
  • சாம்சங் கேலக்ஸி எம்30 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
விளம்பரம்

இந்தியாவில் இன்று இரண்டாவது முறையாக சாம்சங் கேலக்ஸி எம்30 விற்பனைக்கு வெளியாக உள்ளது. கடந்த வாரம் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் தளங்களில் சேல் நடந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் சேல் துவங்கியுள்ளது.

மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் சூப்பர் அமோலெட் திரையைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மார்கெட்டில் நாளை (13 மார்ச்) வெளியாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ போனுக்கு போட்டியாக வந்துள்ளது.

இன்று சரியாக 12 மணி முதல் அமேசான் மற்றும் சாம்சங்கின் ஆன்லைன் தளங்களில் துவங்கும் இந்த விற்பனையின் மூலம் குறைந்த அளவு போன்களையே வாங்க முடியும் எனப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்30  விலை (இந்தியா):

சாம்சங் கேலக்ஸி எம்30, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியுடைய இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.14,990க்கு விற்கப்படுகிறது. அதுபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகொண்ட சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,990க்கு விற்கப்படுகிறது.

மேலும் இந்தத் தயாரிப்புகள் கிரேடியன்ட் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகிறது. இந்த சேலின் மூலம் கட்டணமில்லா தவணைத் திட்டம், போனுக்கான இன்சுரன்ஸ் ரூ.1,119 விலையில் மற்றும் ஜியோவின் டபுள் டேட்டா போன்ற பல ஆஃபர்களுடன் வெளியிடுகிறது சாம்சங்.

 

 

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன்களின் அமைப்புகள்:

இரண்டு சிம் கார்டுகளுக்கான இடம், ஆண்ட்ராய்டு 9 பைய் வசதியுடன் வெளியாகமல் 8.1 ஓரியோ மென்பொருளுடன் இந்தத் தயாரிப்பு கடந்த மாதம் வெளியானது. 6.4 இஞ்ச் ஹெச்டி திரை, சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி-யூ திரை மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எம்30 கொண்டுள்ளது.

வைட்வையின் எல்1 சான்றிதழை இந்த போன் பெற்றுள்ளதால் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் வீடியோக்களை ஹெச்டி தரத்தில் பார்க்க முடியும். மற்ற அமைப்புகளான ஆக்டா கோர் எக்ஸ்னாஸ் 7904 பிராசஸரை கொண்டுள்ளது. கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை 13 மெகா பிக்சல் ஆர்ஜிபி சென்சார், 5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் அல்ட்ரா வையிட் சென்சார் உள்ளது.

முன்புற கேமராக்களைப் பொறுத்தவரை 16 மெகா பிக்சல் செல்ஃபி சென்சாரும் இதில் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட் போனின் உள்ளிருக்கும் சேமிப்பு வசதியைப் பொறுத்தவரை 64 ஜிபி மற்றும்128 ஜிபி என இரண்டு வகைகள் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி வசதியைப் பொறுத்தவரை 5000mAh உள்ள நிலையில் கூடுதலாக 15W சார்ஜர் மற்றும் டைப் சி போர்ட் உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் பின்புறத்தில் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரும் முன்புறத்தில் ஃபேஸ் அன்லாக் சென்சாரும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Crisp Super AMOLED display
  • Good camera performance in daylight
  • Solid battery life
  • Bad
  • Average low-light camera performance
  • Spammy notifications
  • Gets slightly warm after gaming
  • Dated Android version
Display 6.40-inch
Processor Samsung Exynos 7904
Front Camera 16-megapixel
Rear Camera 13-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »