இந்த வார தொடக்கத்தில் கேலக்ஸி எம் 30எஸின் புதிய வேரியண்ட்டை சாம்சங் அறிவித்தது
சாம்சங் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டை அமேசான் மற்றும் அதன் சொந்த இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கும்
Samsung Galaxy M30s-ன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வேரியண்ட் இன்று விற்பனைக்கு வரும். இந்த புதிய வேரியண்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
Samsung, Galaxy M30s -ன் சமீபத்திய 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலையை ரூ.14,999-யாக நிர்ணயித்தது. புதிய வேரியண்ட் Opal Black, Sapphire Blue மற்றும் Quartz Green கலர் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கும். சாம்சங், இந்த போனின் அடிப்படை 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலையை ரூ.12,999-யாகவும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்டின் விலை இப்போது ரூ.15,999-யாகவும் குறைத்துள்ளது.
சாம்சங் 4 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை அமேசான் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கும். ஒரு அறிமுக சலுகையாக, HDB நிதி சேவைகளுடன் 5 சதவீத கேஷ்பேக்கைப் பெறலாம்.
Samsung Galaxy M30s எக்ஸினோஸ் 9611 SoC-யால் இயக்கப்படுகிறது, இப்போது தேர்வு செய்ய மூன்று வேரியண்டுகள் உள்ளன. இது 6,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜருடன் தொகுக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy M30s-ல் 6.4 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே முழு எச்.டி + ரெசல்யூஷன் மற்றும் முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. சாம்சங், Galaxy M30s-ஐ ஒன்யூஐ உடன் Android 9 Pie-ல் இயக்குகிறது. இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Best Phone Deals Under Rs. 20,000
Infinix GT 50 Pro India Launch Timeline Revealed; to Debut New Gaming Ecosystem